- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇன்று 28-05-2025 மூன்றாம் பிறை தரிசனம்

இன்று 28-05-2025 மூன்றாம் பிறை தரிசனம்

- Advertisement -

அமாவாசை முடிந்து மூன்றாம் நாள், சந்திர பகவானை தரிசனம் செய்தால், அந்த சிவபெருமானையே தரிசனம் செய்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். மூன்றாம் பிறை சந்திர ரூபத்தில், பூலோகத்தில் இருக்கும் மனிதர்களுக்கு சிவபெருமான் நேரடியாக காட்சி தருகின்றார் என்றே சொல்லலாம்.

சிவனை தரிசனம் செய்ய விரும்புபவர்கள் இன்று மாலை 6:30 மணிக்கு மேற்கு திசையில் உதிக்கும் மூன்றாம் பிறை நிலவை தரிசனம் செய்ய தவற விட்டு விடாதீர்கள். இந்த மூன்றாம் பிறை தரிசனத்தில் இருக்கும் சிறப்புகளை பற்றிய அரிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இப்போது இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

மூன்றாம் பிறை தரிசனம் சிவன் வழிபாடு

மூன்றாம் பிறை தரிசனத்தை அவரவர் வீட்டில் இருந்து தான் பெரும்பாலும் எல்லோரும் தரிசனம் செய்வோம். ஆனால் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், தஞ்சை பெரிய கோவில், ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து மூன்றாம் பிறை தரிசனத்தை செய்தால் சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலில் நவகிரகங்கள் லிங்க வடிவில் காட்சி தரும். அந்த நவகிரகங்களை வணங்கி விட்டு நவதானியத்தில் கொஞ்சம் பச்சரிசி சேர்த்து, கொஞ்சம் வெல்லம் கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு, அந்த பிரசாதத்தை அந்த கோவில் மரத்தடியில் இருக்கும் எறும்புகளுக்கு அன்னதானமாக கொடுத்தால், நம் வாழ்வில் இருக்கும் வறுமை பணக்கஷ்டமெல்லாம் படிப்படியாக குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

வாய்ப்பு உள்ளவர்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை செய்யலாம். இன்று மூன்றாம் பிறை தரிசனத்திற்கு மட்டும் இந்த பரிகாரம் அல்ல. எந்த மாதத்தில் வரும் மூன்றாம் பிறந்து தரிசனத்தை நீங்கள் தஞ்சை பெரிய கோவிலில் செய்தாலும் அதற்கு உண்டான பலன் நிச்சயம் கிடைக்கும்.

வாய்ப்பு இல்லாதவர்கள் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவில்களுக்கு சென்று அங்கு உள்ள மரத்தடியில் இந்த பிரசாதத்தை எறும்புகளுக்கு உணவாக அளித்து, வீட்டில் இருக்கும் வறுமையை விரட்டி அடியுங்கள். இந்த வழிபாட்டை சரியாக மூன்றாம் பிறை அன்று 6:30 மணிக்கு செய்வது மிக மிக சிறப்பு வாய்ந்தது.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் உங்கள் வீட்டு பக்கத்தில் சந்திர சூடேஸ்வரர், சந்திர மௌலீஸ்வரர், சந்திரசேகரர், இப்படி ஈசனுக்கு பெயர் இருந்தது என்றால், அந்த குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று சந்திர தரிசனம் செய்வது பெரும் பாக்கியத்தை அளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குழப்பமான ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல், மனக்குழப்பத்தில் அவதிப்படுபவர்கள் இன்று மாலை கட்டாயம் சந்திர பகவானை தரிசனம் செய்து விடுங்கள். இப்போது மழைக்காலமாக இருக்கிறது. மேகமூட்டமாக இருக்கிறது. பிறை நிலவு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை  மேற்கு நோக்கியவாறு நின்று கொண்டு மாலை 6:30 மணியிலிருந்து 6:45 மணி வரை, இந்த இடைப்பட்ட 15 நிமிட நேரத்தில் வேண்டுதல் வைத்தாலும், உங்களுடைய பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும் அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பை ஏற்படுத்தும் வைகாசி மூன்றாம் பிறை

இந்த மூன்றாம்பிறை தரிசனத்தில் உங்களோடு இப்படிப்பட்ட ஆன்மீகம் சார்ந்த ஒரு தகவலை பகிர்ந்து கொண்டதில் மனம் மகிழ்ச்சி உடன், இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்