இந்த மாதம் 26-05-2025 திங்கட்கிழமை அன்று அமாவாசை திதி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது மிக மிக சக்தி வாய்ந்த சோமவாரை அமாவாசை. இந்த அமாவாசையில் வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனமும், அதிசக்தி வாய்ந்த நாள் தான். ஆகவே இந்த மூன்றாம் பிறை தரிசனம் யாரும் தவற விடக்கூடாது.
குறிப்பாக உங்கள் வாழ்வில் இருக்கும் கடன் சுமை குறைய, செல்வ வளம் உயர, இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை பார்க்கும்போது சொல்ல வேண்டிய ஒரு வரி மந்திரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இந்த மந்திரத்தை இன்று மாலை குறிப்பிட்ட எந்த நேரத்தில் சொன்னால் பண வசியம் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த நேரத்தைப் பற்றிய விரிவான தகவல் மற்றும் பண வசிய மந்திரம் பற்றிய தகவலை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மே மாதம் 28ஆம் தேதி புதன்கிழமை இன்று மாலை 6:31 நிமிடம் முதல் 7:59 மணி வரை மூன்றாம் பிறை தரிசனமானது நமக்கு தெரியும் என்பது பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேரம். இந்த நேரத்தை பயன்படுத்திதான் நாம் சந்திர தரிசனத்தையும் காண வேண்டும். பின் சொல்லக்கூடிய மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும். உங்களால் முடிந்தால் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று, இந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த பண வசியம் மந்திரத்தை உச்சரிக்கலாம்.
முடியாதவர்கள் வீட்டிலேயே மொட்டை மாடி பால்கனி போன்ற பகுதிகளில் மேற்கு திசை நோக்கி அமர்ந்து, இந்த மந்திர உச்சாடனத்தை மேற்கொள்ள வேண்டும். பிறை நிலவு தரிசனம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு கிடைத்தால் அது மிகப் பெரும் பாக்கியம். அந்த ஈசனே உங்களை ஆசீர்வாதம் செய்ததற்கு சமம்.
ஆனால் அவ்வளவு எளிதில் நம்மால் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை காண முடியாது. எல்லா தடைகளையும் மீறி உங்களுக்கு மூன்றாம் பிறை தரிசனம் கிடைத்துவிட்டால், உங்களுடைய கஷ்டங்கள் அன்றோடு தீர்ந்தது என்று தான் அர்த்தம். ஈசனை வேண்டிக் கொள்ளுங்கள். அனைவருக்கும் மூன்றாம் பிறை தரிசனம் கிடைக்க வேண்டும் என்று.
இன்று மாலை மேற்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு உங்களுடைய செல்வ வளம் வளர்பிறை நிலவு போல வளர்ந்து கொண்டே செல்ல வேண்டும். வறுமையானது இன்றோடு ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மகாலட்சுமியின் வருகை உங்கள் வீட்டில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த பண வசிய மந்திரத்தை உச்சரிக்கலாம்.
கணக்கு வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த பிறை நிலவு தெரியக்கூடிய அந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். அதாவது இன்று மாலை பஞ்சாங்க நேரப்படி, 6:31 முதல் 7:59 மணி வரை இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்த மந்திரத்தை நீங்கள் எத்தனை முறை வேண்டும் என்றாலும் உச்சரிக்கலாம்.
பண வசியம் மந்திரம்
ஸ்ரீம் ப்ரிஸீ
Shreem Breeze !
இதையும் படிக்கலாமே: இன்று 28-05-2025 மூன்றாம் பிறை தரிசனம்
இதுதான் மந்திரம். இது பணத்தை காந்தம் போல ஈர்த்துக் கொண்டு வந்து உங்கள் கையில் கொடுத்து விடும். இந்த மந்திரத்தை தினமும் சொன்னாலும் மிகவும் நல்லது. இருப்பினும் அதிசக்தி வாய்ந்த இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை பார்க்கும் போது மூன்றாம் பிறை நிலவு வானத்தில் உதிக்கும் போது இந்த மந்திரத்தை சொன்னால், அந்த ஈசனின் அருளால் அதீத பலனை நம்மால் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தேவைப்படுபவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள் இன்று மாலை இந்த மந்திரத்தை பயன்படுத்தி பலன் பெறவும்.