இன்று செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் வளர்பிறை அஷ்டமி திதி. இன்று பைரவரை நீங்கள் வழிபாடு செய்தீர்களா. மறந்திருந்தாலும் பரவாயில்லை. இனியும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. செல்வ வளத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல, அடமானத்தில் வைத்திருக்கும் நகைகளை மீட்க, வாழ்வாதாரத்திற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க, வீட்டிற்கு தேவையான தங்கத்தை வாங்க, தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கு செல்ல, வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.
இன்று நீங்கள் பைரவர் கோவிலுக்கு சென்று, ஸ்வர்ணாகர்ஷனை பைரவரை வழிபாடு செய்திருந்தால் அதி அற்புதம் வாய்ந்த பலன் உங்களுக்கு கிடைக்கும். சூழ்நிலை காரணமாக கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.
இன்று இரவு பைரவரை நினைத்து இந்த ஒரு பரிகாரத்தை செய்து விடுங்கள். பணம் சம்பாதிக்க யானை பலத்தை பைரவர் உங்களுக்கு கொடுத்து விடுவார். அது என்ன பரிகாரம் ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
வளர்பிறை அஷ்டமி திதி பரிகாரம்
இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய வீட்டிற்கு வெளியே வாருங்கள். கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட் அல்லது சாப்பிடுவதற்கு வேறு ஏதாவது பொருள் இருந்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள். தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு உங்கள் கையால் அந்த பிஸ்கட்டுகளை போட வேண்டும் “ஓம் பம் பைரவாய நமஹ” என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இன்று இரவு நாய்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.
இன்று இரவு வீதியில் சுற்றி திரியும் நாய்கள் பசியோடு இருக்கும் அல்லவா. அந்த நாய்களுக்கு உணவு அளித்துவிட்டு பைரவரை மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் அந்த பைரவ வாகனத்தின் மூலம் உங்களுக்கு ஆசிர்வாதம் கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் பலம் உங்களுக்கு வந்துவிடும்.
பிறகு வீடு திரும்பியதும், கை கால்களை அலம்பி கொண்டு, தூங்க செல்லுங்கள். பைரவரை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். வருமானம் பெருக வேண்டும், தொழிலில் லாபம் பெருக வேண்டும், செய்யும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்க வேண்டும், என்று நன்றாக மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டு, பைரவா நீயே எனக்கு காவலாக நிற்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, “ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவர் பாதங்கள் சரணம்” என்று சொல்லி தூங்கச் சொல்லுங்கள் அவ்வளவுதான்.
இதையும் படிக்கலாமே: நாளை 4-6-2025 வாஸ்து நாள் பரிகாரம்
ஸ்வர்ணகிருஷ்ண பைரவரின் ஆசிர்வாதத்தால் உங்கள் வீட்டில் செல்வ வளமானது நிச்சயம் உயரும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்று இரவு பைரவரை மனதில் நிறுத்தி பாருங்கள். நாளையே உங்களுடைய பெரிய பண கஷ்டம் ஒன்று தீரும். இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு வளர்பிறை அஷ்டமி திதி நாளில் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.