பல இடங்களில் புழங்கிய பிறகு தான், பணம் நம் கையில் வருகிறது. நல்ல காரியமாக இருந்தாலும் அதற்கு பணம் தேவை. கெட்ட காரியத்திற்கும் பணம் தேவை. ஏன் பிணமாக இருப்பவர்களுக்கு கூட நெற்றியில் வைக்கப் பயன்படுத்து அந்த ஒரு ரூபாய் நாணயம் தான்.
இப்படி எல்லா விஷயத்திற்கும் பயன்படுத்தக்கூடிய இந்த பணத்திற்கு ஏதேனும் தோஷம் இருக்குமா. இறப்பு வீட்டில் இருக்கும் பணம், கோவில் உண்டியலில் செல்கிறது. இருப்பு வீட்டில் இருக்கும் பணம் நம்முடைய வீட்டிற்கும் ஏதாவது ஒரு வகையில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
இப்படிப்பட்ட பணத்தின் மூலம் நமக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா. பணத்திற்கு தோஷம் இருக்கிறதா இல்லையா? பணத்திற்கு கொடுக்கப்பட்ட சாபம் நம் குடும்பத்தை தாக்குமா? தாக்காதா இதுபோல பிரச்சனைகளிலிருந்து விடுபட நாம் என்னதான் செய்வது ஆன்மீகம் சார்ந்த சில அரிய தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.
திருவோடு பரிகாரம்
பணத்திற்கு தோஷம் இருக்கிறதா இல்லையா? என்று கேட்டால் பணத்திற்கு எந்த விதமான தோஷமோ, தீட்டோ கிடையாது. எந்த பணமாக இருந்தாலும் சரி, அது பணம்தான். அது மகாலட்சுமியின் அம்சம் தான். ஆனால் அடுத்தவர்கள் சாபத்தோடு கொடுக்கக்கூடிய பணம், சாபத்தோடு கொடுக்கக்கூடிய பணம், அடுத்தவர்களுடைய மன கஷ்டத்தோடு நம் கைக்கு வரக்கூடிய பணத்தின் மூலம் நமக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்று சொல்கிறது சாஸ்திரம்.
பணத்தை ஒருவர் மற்றவரிடம் கொடுக்கும் போது, அவருடைய மனநிலை எப்படி இருக்கிறது? சில பேர் தாலியை கூட அடமானம் வைத்து பணத்தை கொடுப்பார்கள். இந்தப் பணத்தை வைத்திருப்பவர்கள் வாழ்வில் முன்னேறவை கூடாது என்றெல்லாம் சில பேர் சாபம் கொடுப்பார்கள். அப்படி வரக்கூடிய பணத்திற்கு, தோஷம் இருக்கும்.
அப்படிப்பட்ட பணம் நம் கைக்கு வந்தால் அந்த பணத்தால் நமக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி என்று பார்த்தால் நம்மால் பணத்தை வீட்டில் வைத்துக் கொள்ளவே முடியாதே. இந்த தோஷத்திலிருந்து விடுபடுவது தான் எப்படி.
இதற்கு ஆன்மீக ரீதியாக ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. திருவோடு பரிகாரம். பணத்திற்கு எவ்வளவு பெரிய சாபம் இருந்தாலும், எவ்வளவு பெரிய தோஷம் இருந்தாலும் அந்த பணத்தை திருவோட்டில் வைத்து எடுக்கும் போது அந்த தோஷமும் சாபமும் விலகிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. எல்லோர் வீட்டிலும் ஒரு திருவோடு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டிற்குள் வரும் பணத்தையும் அந்த திருவோட்டில் வைத்து எடுத்து செலவு செய்ய வேண்டும். நீங்கள் யாருக்கேனும் பணம் கொடுப்பதாக இருந்தாலும் பணத்தை திருவோட்டில் வைத்து எடுத்து கொடுக்க வேண்டும். ரிஷிகளுக்கு சமமாக சொல்லப்படுவது திருவோடு. பணத்தை திருவோட்டில் வைத்து எடுக்கும் போது அதற்கு இருக்கும் தோஷம் சாபம் கர்ம வினை எல்லாமே அழிந்துவிடும்.
வட்டித்தொழில் செய்யக்கூடாது என்று சொல்லுவார்கள். வட்டி தொழில் செய்தால் அந்த குடும்பத்தில் வாரிசு இருக்காது என்றும் ஒரு கருத்து உள்ளது. ஆனால் வட்டிக்கு பணம் வாங்கி வாழ்வாதாரத்தை நடத்துபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நீங்கள் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களாக இருந்தாலும் சரி, அந்த பணத்தை திருவோட்டில் வைத்துவிட்டு, வட்டிக்கு பணம் கொடுத்து பாருங்கள். வட்டிக்கு பணத்தை விடுவதால் உண்டாகக்கூடிய கர்ம வினைகள் உங்களை உங்கள் குடும்பத்தை எதுவுமே செய்யாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அவசரத்துக்கு பணம் தேவை என்றால் கஷ்டப்படுபவர்கள் வட்டிக்கு பணத்தை வாங்கி தான் தங்களுடைய பண தேவையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அதற்காக வட்டிக்கு விடுபவர்கள், அதிக வட்டிக்கு விடாமல் ஒரு குறிப்பிட்ட நியாயமான வட்டிக்கு அந்த பணத்தை கஷ்டப்படுபவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வட்டிக்காக கைநீட்டி பணம் வாங்கியவர்களும் ஏமாற்றக்கூடாது.
இதையும் படிக்கலாமே: தசமி திதியில் செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு
பணத்தை வட்டிக்கு கொடுத்தவர்களும் ஏமாறக்கூடாது. இந்த விஷயங்கள் எல்லாம் சரியாக நடக்க வேண்டும். என்றால் அதற்கு ஒரே தீர்வு இந்த திருவோடு மட்டும் தான். எல்லோர் வீட்டிலும் ஒரு திருவோடை வாங்கி வையுங்கள். வரும் வருமானத்தை திருவோட்டில் வைத்து செலவு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குடும்பத்திற்கு பணத்தால் எந்த ஒரு தோஷமும் ஏற்படாது என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.