- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணத்தின் மீது இருக்கும் திருஷ்டி விலக பரிகாரம்

பணத்தின் மீது இருக்கும் திருஷ்டி விலக பரிகாரம்

- Advertisement -

நம்முடைய வீட்டிற்குள் வரும் பணம், வீட்டில் நிலையாக தங்காமல் இருப்பதற்கு காரணம், அந்த பணத்தின் மீது இருக்கும் கண் திருஷ்டி. ஏதோ ஒரு தொழில் செய்கின்றோம். அந்த தொழிலில் வருமானம் வருகிறது. அந்த வியாபாரம் நடப்பதை பார்த்து நான்கு பேர் பெருமூச்சு விட்டால், இவனுக்கு மட்டும் நிறைய வியாபாரம் நடக்கிறதே என்று மனதிற்குள்ளேயே பொறாமை பட்டுக்கொண்டால், அந்த வியாபாரத்தால் வீட்டிற்குள் வரும் லாபம் கண் திருஷ்டியோடு தான் வரும்.

அந்த லாபத்தால் வந்த பணம் வீண் விரைய செலவுகள் ஆகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அப்படி இல்லை என்றால், மீண்டும் அந்த வியாபாரம் சரியாக நடக்காமல் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இதுபோல பிரச்சனையிலிருந்து விடுபட, அந்த பணத்தின் மீது விழும் கண் திருஷ்டியை நிலை வாசலிலேயே தடுத்து நிறுத்த என்ன பரிகாரம் செய்வது.

- Advertisement -

இது ஒரு உதாரணத்திற்காக சொல்லப்பட்டது. வியாபாரத்தின் மூலம் மட்டும் லாபம் நம் வீட்டிற்குள் வராது. வேலை செய்து சம்பாதித்துக் கொண்டு வரும் பணத்தின் மூலமாகவும் இதுபோல கண் திருஷ்டிகள் விழுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டிற்குள் வரும் பணம், எந்த ஒரு கண் திருஷ்டியும் இல்லாமல், நம் கையில் நிலையாக தங்க வேண்டும். நம் கைக்கு வந்த பணம், நமக்கு உபயோகமான வகையில், சுப செலவுகளுக்காக மட்டும் செலவும் செய்யப்பட வேண்டும்.

வரக்கூடிய வருமானத்தில் தங்கமோ சொத்தோ வாங்க வேண்டும். எதற்கும் இல்லாமல் மருத்துவ செலவு அல்லது யாரிடமாவது பணத்தை கொடுத்து ஏமாறுவது இது போல பிரச்சினைகள் வரக்கூடாது. இப்படி பணமானது சுப செலவுகளுக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்றால் என்ன செய்வது. இதற்காக செய்யப் போகும் ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பணத்தின் மீது விழும் கண் திருஷ்டி விலக

இன்று வியாழக்கிழமை அல்லவா. குபேரருக்கு இந்த நாள் மிகவும் உகந்த நாள். பூஜை அறையில் இன்று மாலை 6 மணிக்கு மேலாக ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்‌‌. உள்ளங்கைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக்கொண்டு உங்களுடைய பிரார்த்தனையை செய்ய வேண்டும். எனனுடைய வருமானம் நிலையாக தங்க வேண்டும். வருமானத்தில் பட்ட கண் திருஷ்டியால் எந்த ஒரு பாதிப்பும் என் குடும்பத்திற்கு வந்து விடக்கூடாது. என்ற சொல்லி எலுமிச்சம் பழத்தை கையில் வைத்து கொண்டே, பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள்.

குபேரர் மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லட்சுமி குபேராய நமஹ!

- Advertisement -

மந்திரத்தைச் சொல்லி முடித்துவிட்டு அந்த எலுமிச்சம் பழத்தை இரண்டாக அறுத்து, இரண்டு பக்கத்திலும் நல்ல சிவப்பு நிற குங்குமத்தை தடவி நிலை வாசலில் இரண்டு பக்கத்திலும் வைத்து விடுங்கள். உங்களுடைய வீட்டிற்குள் நுழையும் பணம் கண் திருஷ்டி இல்லாமல் நுழையும். கண் திருஷ்டியை எல்லாம் நிலை வாசலிலேயே இந்த எலுமிச்சம் பழம் தடுத்து நிறுத்தி விடும். பணத்திற்கு மட்டும் கண் திருஷ்டி விழும் என்று சொல்ல முடியாது.

இதையும் படிக்கலாமே: விரைய செலவை குறைக்கும் குலதெய்வ வழிபாடு

நம் வீட்டிற்குள் நுழையும் நபர்கள் கூட நம்முடைய வீட்டை பார்த்து பொறாமை படலாம். இதனாலும் நமக்கு சில பொருள் இழப்பு பண இழப்பு, குடும்ப சந்தோஷம் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது. அதை தடுக்கவும் இந்த எளிமையான பரிகாரம் நமக்கு உதவியாக இருக்கும். வியாழக்கிழமையில் இந்த குறிப்பிட்ட பரிகாரத்தை குறிப்பிட்ட மந்திரத்தை சொல்லி செய்யும்போது நிச்சயமாக உங்கள் வீட்டிற்குள் இருக்கும் பணம் வீண் விரைய செலவுக்கு வெளியில் செல்லாது. நம்பிக்கையோடு நீங்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்