- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவிரைய செலவை குறைக்கும் குலதெய்வ வழிபாடு

விரைய செலவை குறைக்கும் குலதெய்வ வழிபாடு

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக பல விதங்களில் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். யாருக்கும் எளிதில் பணம் என்பது கிடைப்பதில்லை. ஆனால் அந்த பணத்தை சம்பாதிப்பதை விட செலவு செய்வது என்பது மிகவும் எளிமையான ஒன்றாகவே இருக்கிறது. ஒரு சொடக்கு போடும் நேரத்தில் பல கோடி ரூபாயை கூட நம்மால் செலவு செய்ய முடியும். ஆனால் அதை சம்பாதிக்க முடியாது அல்லவா? அப்படி நாம் செய்யக்கூடிய செலவு என்பது நம்முடைய வருமானத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அதே சமயம் தேவையற்ற செலவாக இருக்கக்கூடாது.

பலரும் கஷ்டப்பட்டு சம்பாதிக்க கூடிய பணத்தை திடீரென்று ஏற்படக்கூடிய தேவையற்ற செலவுகளால் முற்றிலும் இழந்து விடுவார்கள். ஒரு சிலரோ அந்த செலவுகளை சமாளிப்பதற்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு கூட தள்ளப்படுவார்கள். இருப்பினும் அந்த செலவினால் அவர்களுக்கு எந்தவித ஆதாயமோ, நன்மையோ ஏற்பட்டு இருக்காது. அந்த செலவுகளை தான் நாம் வீண் விரயம் என்று கூறுகிறோம். அப்படி தேவையற்ற செலவுகள் அதிக அளவில் ஏற்படும் பட்சத்தில் அதை குறைத்து, சம்பாதித்த பணத்தை சேமிப்பாக்குவதற்கு குலதெய்வ வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

செலவை குறைக்கும் குலதெய்வ வழிபாடு

இந்த வழிபாட்டை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை இந்த இரண்டு கிழமைகளில் ஏதாவது ஒரு கிழமையில் தான் செய்ய வேண்டும். காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய குலதெய்வத்தின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு எப்பொழுதும் போல் தீபமேற்றி வைத்துக்கொண்டு ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் 11 ரூபாயை வைக்க வேண்டும். அப்படி வைக்கக்கூடிய இந்த 11 ரூபாயில் சிறிதளவு மஞ்சள் மற்றும் சிறிதளவு புனுகை தடவி வைக்க வேண்டும்.

பிறகு இதை ஒரு மூட்டையாக கட்டி உங்களுடைய இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு குலதெய்வத்தை மனதார வழிபாடு செய்ய வேண்டும். அந்த வழிபாட்டில் வீண் விரயங்கள் எதுவும் ஏற்படக்கூடாது, தேவையற்ற செலவுகள் எதுவும் நேரக்கூடாது, சம்பாதிக்கும் பணம் சேமிப்பாக உயர வேண்டும் என்று ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த மூட்டையை குலதெய்வத்தின் பாதத்தில் வைத்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.

- Advertisement -

தினமும் தீபம் ஏற்றும் பொழுது இந்த 11 ரூபாய் மூட்டைக்கும் ஊதுபத்தி கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். எப்பொழுது குலதெய்வ ஆலயத்திற்கு செல்கிறோமோ அப்பொழுது இந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு போய் குலதெய்வத்திடம் மனதார உங்களுடைய வேண்டுதலை வைத்து குலதெய்வ உண்டியலில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதலை குலதெய்வம் பரிபூரணமாக ஏற்று விரைய செலவுகள் வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

இதையும் படிக்கலாமே: கோடீஸ்வர யோகம் தரும் குபேர காலம்

நம் குலத்தைக் காக்கக்கூடிய குல தெய்வத்தை நினைத்து இந்த முறையில் காணிக்கை எடுத்து வைத்து வழிபாடு செய்ய வீண்விரையத்தை மட்டுமல்லாமல் நம்முடைய வேண்டுதலும் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்