உங்கள் வீட்டில் சம்பாதிக்கக்கூடிய இடத்தில் இருக்கும் ஒருவர், தொழில் வளர்ச்சி பெற்று மென்மேலும் அதிகம் சம்பாதிக்க கூடிய முன்னேற்றம் பெறுவதற்கு, அவர்கள் கையால் இந்த தீபத்தை ஏற்றுவது நல்ல பலன்களை கொடுக்கும். ஆன்மீக ரீதியாக பல நன்மைகளை அளிக்கக்கூடிய நவதானிய தீபம் எப்படி ஏற்றுவது? அதன் பலன்கள் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.
நவதானியங்கள் என்பவை ஒன்பது கிரகங்களுக்கும் உரிய தானியங்களாகும். இந்த தானியங்களைக் கொண்டு தீபம் ஏற்றும் போது, அந்தந்த கிரகங்களின் ஆற்றலை ஈர்த்து, அவற்றின் நற்பலன்களைப் பெறலாம். இதனால் எந்த வகையான தோஷங்களாக இருந்தாலும், அவை நீங்க பெற்று, தொழிலில் சிறந்த வளர்ச்சியை அடைவோம் என்பது நம்பிக்கை.
நவதானியங்கள் மற்றும் அவற்றுக்குரிய கிரகங்கள்:
கோதுமை: சூரியன்
நெல் / பச்சரிசி: சந்திரன்
துவரை: செவ்வாய்
பச்சைப்பயறு: புதன்
கொண்டைக்கடலை: குரு (வியாழன்)
மொச்சை / மொச்சைக் கொட்டை: சுக்கிரன் (வெள்ளி)
எள்: சனி
உளுந்து: ராகு
கொள்ளு: கேது
நவதானிய தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள்:
நவதானிய மாவிளக்கு (தீபம்) என்பது மிகவும் புனிதமான ஆன்மீக வழிபாட்டின் ஒரு பகுதியாகும். இதனை பண வரவு, நிதி ஸ்திரத்தன்மை, குடும்ப சாந்தி, மற்றும் கிரக தோஷ நிவாரணம் ஆகியவற்றிற்காக பக்தர்கள் செய்து வருகிறார்கள். இதை வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அல்லது நவராத்திரி நாட்களில் செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது.
நவதானியங்களை சேர்த்து மாவு செய்து, மாவிளக்கு போல் வடிவமைத்து, அதில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு, திரியை வைத்து தீபம் ஏற்றுவது தான் நவதானிய தீபம். இதனால் கிடைக்கும் நற்பலன்கள் ஏராளம். நவதானியங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு கிரகத்தையும் பிரதிபலிக்கின்றன. இந்த தீபத்தை ஏற்றுவதால் அந்த கிரகங்களின் சாந்தி ஏற்பட்டு பண வரவு அதிகரிக்கிறது. ஒன்பது தானியங்களும் ஒன்பது கிரகங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதால், தீபம் ஏற்றுவதால் நவகிரகங்களின் சமநிலை ஏற்படுகிறது. ராகு-கேது தோஷம், சனி தோஷம் போன்றவை நிவர்த்தி ஆகின்றன.
வீட்டில் சாந்தியும், சக்தியும் பெரிதும் உயரும், தீபம் ஏற்றும் இடத்தில் நேர்மறை சக்தி பெருகும். வீட்டில் மனஅமைதி மற்றும் மகிழ்ச்சி நிலை ஏற்படும். மாணவர்கள் அல்லது தொழில் மேற்கொள்ளும் நபர்கள் இதை செய்தால், மன தெளிவு, அறிவு, ஒருமுகப் பார்வை அதிகரிக்கும். திருமணத் தடை, குழந்தை பாக்கியம் போன்றவை தாமதமாக இருக்கும் போதும், நவதானிய தீபம் வழிபாடு நன்மை தரும். தானியங்களில் லட்சுமிதேவி இருப்பதால், லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:
நாளை 10-6-2025 மங்கள வார செவ்வாய்க்கிழமை பௌர்ணமி
தீபம் ஏற்றும் முறைகள் (சுருக்கமாக):
நவதானிய தீபத்தை வெள்ளிக்கிழமை (மகாலட்சுமிக்கு உகந்த நாள்), அமாவாசை (கர்ம விளைவுகளால் வரும் தடைகளை நீக்கும்), பௌர்ணமி (ஒளி மற்றும் ஆற்றல் பெருக்கும்), நவராத்திரி நாட்களில் (சக்தியின் பூரண கிருபை பெற) ஏற்றி வழிபடுவது சிறப்பு. வடகிழக்கு அல்லது கிழக்கு நோக்கி வைத்து ஏற்றவும்..“ஓம் மகா லக்ஷ்மியை நமஹ” என்ற மந்திரத்தை 11, 21 அல்லது 108 முறை ஜபிக்கலாம். குடும்பத்தில் அனைவரும் மன அமைதியுடன் கலந்து கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். தீபம் ஏற்றி அணைந்து ஆறியதும், அந்த மாவினை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பகிர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.