- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிரிகளை ஒதுக்கி வைக்க சுவிட்ச் வோர்ட்

எதிரிகளை ஒதுக்கி வைக்க சுவிட்ச் வோர்ட்

- Advertisement -

நம்முடைய நிம்மதியை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சில பேர் வேலை செய்வார்கள். அவர்களை தானே நாம் நம்முடைய எதிரிகள் பட்டியலில் வைத்திருப்போம். இவர்கள் என்னை விட்டு விலகி சென்றால் போதும். என்னுடைய வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். என்னைப் பற்றி இவர்கள் பேசாமல் இருந்தாலே போதும், என்னுடைய வாழ்க்கையில் பிரச்சனை வராது. என்னை பற்றிய தவறான பேச்சுகளை பரப்பி அவதூறாக பேசுவதே இவர்கள் மட்டும்தான்.

அந்த குறிப்பிட்ட நபரை என் வாழ்க்கையில் இருந்து தள்ளி வைப்பது எப்படி. என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்தால், உங்களை எப்போதுமே டார்ச்சர் செய்து கொண்டிருக்கும் அந்த நபரை உங்களிடமிருந்து விலக்கி வைக்க, ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பதிவு தான் இது. உங்களுக்கு வேண்டாதவர்களை உங்களிடம் இருந்து விலக்கி வைக்கப் போகும் ஒரு சுவிட்ச் வோர்டை தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

வேலையில் உங்களுக்கு தொந்தரவாக இருப்பவர்கள், வியாபாரத்தில் உங்களை முன்னேற விடாமல் தடுப்பவர்கள், சதாகாலம் சண்டை போடும் அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்கள், கூடவே இருக்கும் சொந்த பந்தங்கள் என்று யாரை விலக்கி வைக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களை நினைத்து இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். குளிக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி கல்லுப்பு போட்டு கரைத்து, எனக்கு வேண்டாத விஷயங்கள் என்னை விட்டு விலகி விட வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டி அந்த கல்லுப்பு தண்ணீரில் குளித்து விட வேண்டும். பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இறைவனின் முன்பு அமர்ந்து இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த வார்த்தையை கண்களை மூடி வேகமாக சொல்ல துவங்குங்கள்.

- Advertisement -

எதிரிகளை விரட்ட ஸ்விச் வோர்ட்

Crystal Unmask (க்ரிஸ்டல் அன்மாஸ்க்)

ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மந்திர வார்த்தை இது. இந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருங்கள். 5 லிருந்து 10 நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தி உங்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டிய அந்த நபரின் பெயரைச் சொல்லி, இந்த வார்த்தையை உச்சரிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை துவங்கிய இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 நாட்கள் செய்யுங்கள்.

- Advertisement -

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு இதேபோல இந்த வார்த்தையை 11 நாட்கள் சொன்னீர்கள் என்றால், நீங்கள் யாரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, உங்களை விட்டு யார் விலக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த நபர் உங்களிடமிருந்து தூரமாக சென்று விடுவார்.

இதையும் படிக்கலாமே: 9-6-2025 ஜூன் மாத மைத்திரேய முகூர்த்தம்

உங்களைப் பற்றி அவதூறாக பேசியவர்கள், உங்கள் மனதிற்கு பிடிக்காதவர்கள் எப்போதுமே உங்களை தொந்தரவு செய்பவர்கள், உங்களுடைய எதிரிகள், உங்களைப் பற்றிய நினைப்பே இல்லாமல் மாறிவிடுவார்கள். உங்களுக்கு மன நிம்மதி கிடைத்துவிடும். இது ஒரு எளிமையான பரிகாரம் தான். தேவையில்லாத விஷயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து விளக்கி வைக்க, இந்த மந்திர வார்த்தை நிச்சயம் பயனுள்ளபடி அமையும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்