ஜூன் மாதம் 9ஆம் தேதி வைகாசி விசாகம் வரவிருக்கின்றது. இதே தேதியில் தான் மைத்ரேய முகூர்த்த நேரமும் நமக்கு வரவிருக்கிறது. கடன் சுமையிலிருந்து வெளிவர இந்த மைத்ரேய முகூர்த்தத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கலியுகத்தில் கடன் பிரச்சனை அதிகமாக இருக்கும்.
மக்கள் அதில் சிக்கிக் கொண்டு அவதிப்படுவார்கள் என்பதற்காக தான் அந்த காலத்திலேயே சித்தர்கள் இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தை நமக்காக கண்டுபிடித்து ஓலைச்சுவடிகளில் குறிப்பாக எழுதி வைத்துள்ளார்கள். இந்த மையித்ரேய முகூர்த்த நேரத்தில், நாம் வாங்கிய கடனிலிருந்து ஒரு சிறு தொகையை திருப்பி அடைத்தால் போதும்.
கடன் மொத்தம் படிப்படியாக சீக்கிரம் அடையும் என்பது நம்பிக்கை. இந்த ஜூன் மாதத்தின் மைத்ரேய முகூர்த்த நேரம் எந்த நேரத்தில் வருகிறது, செய்ய வேண்டிய முருகர் வழிபாடு, சொல்ல வேண்டிய முருகர் மந்திரம் என்ன, ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
ஜூன் மாத மைத்திரேய முகூர்த்தம் 2025
9-6-2025 மாலை 4:43 மணி முதல் 6:54 மணி வரை மையித்ரேய முகூர்த்த நேரம் இருக்கிறது. இந்த மையித்ரேய முகூர்த்த நேரத்தின் மையப் பகுதி மாலை 5:26-6:09 இந்த இடைப்பட்ட நேரம் அதிசக்தி வாய்ந்த நேரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் நீங்கள் வாங்கிய கடனில் இருந்து ஒரு சிறு தொகையை திருப்பி அடைக்கலாம்.
இப்போதெல்லாம் கைபேசியின் மூலமாகவே ஜிபே வசதி உள்ளது. நினைத்த நேரத்தில் நினைத்த நபருக்கு பணத்தை நம்மால் கொடுக்க முடியும். நீங்கள் யாரிடம் கைநீட்டி கடன் வாங்கி உள்ளீர்களோ, அவர்களுடைய அக்கவுண்டுக்கு வாங்கிய கடனிலிருந்து ஒரு சிறு தொகையை, மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் பணத்தை அனுப்பி விடுங்கள். நிச்சயமாக அந்த கடனானது கூடிய விரைவில் அடைந்து விடும்.
உதாரணத்திற்கு 5 லட்சம் ரூபாய் உங்களுக்கு கடன் இருக்கிறது என்றால், குறைந்தபட்சம் வெறும் 5000 ரூபாயைவது நீங்கள் கடன்காரருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்போது இந்த 5 லட்சம் ரூபாய் கடன் உங்களுக்கு பெரிய சுமையை கொடுக்காது. கடனை அடைப்பதற்கான வழியை இந்த பிரபஞ்சம் சீக்கிரம் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும். இதுதான் இந்த பரிகாரத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் சூட்சமம்.
இந்த மைத்ரேய முகூர்த்த நாளில் வைகாசி விசாக நட்சத்திரமும் வந்திருப்பது அதிசிறப்பு. முருகப்பெருமான் செவ்வாய்க்கு உரிய கடவுள். செவ்வாய் பகவான் தான் நமக்கு கடன் பிரச்சனையை கொடுப்பது. ஆகவே இந்த நாளில் முருகப்பெருமானை வேண்டி செவ்வரளி பூக்களை முருகப்பெருமாள் கோவிலுக்கு வாங்கி கொடுத்து, கடன் சுமை குறைய வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: எதிரிகள் தொல்லை விலக விநாயகர் வழிபாடு
குறிப்பிட்ட இந்த மைத்ரையை முகூர்த்த நேரத்தில் வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகர் கோவிலுக்கு சென்று இந்த வேண்டுதலை வைத்து, அந்த முருகன் கோவிலிலேயே அமர்ந்து “ஓம் ஷம் சரவணபவ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல, உங்கள் கடன் சுமை காணாமலேயே போய்விடும். அந்த முருகனின் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.