- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவைகாசி விசாகம் வருமானம் தரும் முருகன் வழிபாடு

வைகாசி விசாகம் வருமானம் தரும் முருகன் வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் வைகாசி விசாகம். முருகப்பெருமான் ஜோதிப்பிழம்பாக இந்த பூமியில் அவதரித்த நாள். சிவபெருமானின் மறு உருவமாக திகழும் இந்த முருகப்பெருமான், அந்த ஈசனின் நெற்றி கண்ணில் இருந்து தான் அவதாரம் எடுத்தார். முருகப்பெருமானின் பிறந்த நாளை, இன்று நாம் சந்தோஷமாக கொண்டாட வேண்டும். நாளைய 9-6-2025 தினம் வைகாசி விசாகத் அன்று முருகனை சந்தோஷப்படுத்த ஒரு அற்புதமான பாடல் வரிகள்.

இந்த பாடலை மட்டும் நாளைய தினம் முருகப்பெருமான் முன்பு பாடி உதிரி புஷ்பங்களால் அர்ச்சனை செய்தால் போதும். நீங்கள் கேட்ட வரங்கள் எல்லாம் உடனே கை மேல் கிடைத்துவிடும். ஒரு கரங்களால் அல்ல. முருகனின் 12 கரங்களால் நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும். இத்தனை பெரிய பாக்கியத்தை கொடுக்கப் போகும் அந்த பாடல் என்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

முருகனுக்கு எந்த வாசம் நிறைந்த பூக்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம். நாளைய தினம் காலையிலேயே எடுத்து சுத்த வத்தமாக குளித்துவிட்டு, கொஞ்சம் உதிரி புஷ்பங்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு இனிப்பு நெய்வேதியம் வைக்க வேண்டும். முடிந்தால் திணைமாவால் ஏதாவது இனிப்பு நெய்வேத்தியம் செய்து வைத்துவிட்டு, 6 நெய் விளக்குகள் ஏற்றி வைத்துவிட்டு, உதறி புஷ்பங்களை முருகனுக்கு போட்டு இந்த பாடலை படிக்க வேண்டும்.

முருகன் போற்றி பாடல்

நாத விந்து கலாதீ நமோநம
வேத மந்த்ர சொரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம வெகுகோடி

- Advertisement -

நாம சம்பு குமாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம பரசூரர்

சேத தண்ட விநோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ

- Advertisement -

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்

ஈத லும்பல கோலால பூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு மறவாத

ஏழ் தலம்புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் பெருமாளே.

இந்த பாடல் படிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கிறதே. கவலையே படாதீங்க. யூடியூபே இந்த பாடலை ஒழிக்க விட்டு உதிரி புஷ்பங்களை முருகப்பெருமானுக்கு சமர்ப்பணம் செய்து வேண்டுதலை வைத்துப் பாருங்கள். பிறகு உங்களுடைய மன நிம்மதியை வார்த்தையால் சொல்ல முடியாது. இந்த பாடலை கேட்கும் போதே நம் உடம்பிற்குள் ஏதோ ஒரு மாற்றம் உண்டாகும்.

முருகனை நாம் சென்று ஐக்கியமானது போல தோன்றும். அதை வார்த்தையால் சொன்னால் புரியாது. இந்த பாடலை நீங்கள் ஒரு முறை கேட்டு விட்டு பிறகு எதுவாக இருந்தாலும் அடுத்த வேலையை பாருங்கள். இறுதியாக முருகப்பெருமானிடம் உங்களுடைய வேண்டுதலை வையுங்கள். கடன் பிரச்சனை தீர வேண்டும், வருமானம் பெருக வேண்டும், அல்லது வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும், ஆரோக்கியம் வேண்டும் என்று என்ன வரம் கேட்டாலும் முருகப்பெருமான் 12 கரங்களால் உங்களுக்கு வாரி கொடுத்து விடுவார்.

இதையும் படிக்கலாமே: பூஜைகளற்ற வைகாசி விசாக வழிமுறை

ஏனென்றால் முருகப் பெருமானுக்கு அவ்வளவு இஷ்டமான பாடல் வரிகள் இது. இந்த ஆன்மீகம் சார்ந்த பாடலை உங்களோடு இந்த நன் நாளில் பகிர்ந்து கொண்டதில் மனமகிழ்ச்சியுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்