- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசக்கரத்தாழ்வார் வழிபாடு

சக்கரத்தாழ்வார் வழிபாடு

- Advertisement -

மகாவிஷ்ணுவின் முக்கிய ஆயுதமான சுதர்சன சக்கர ஸ்வரூபமாக இருக்கக்கூடிய இவரை, சித்திரை நட்சத்திரத்தில் வழிபட்டு வந்தால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அத்தனை தரித்திரங்களும் நீங்கி, சகல செல்வங்களும், சௌபாக்கியங்களும் வந்தடையும் என்பது ஐதீகம். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி போன்ற பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் ஏற்றத்தை தரக்கூடிய இந்த கடவுள் யார்? அவரை எப்படி வழிபடுவது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

விஷ்ணு பகவானின் கையில் ஏந்தி இருக்கும் சுதர்சன சக்கரத்தின் ஸ்வரூபம் சக்கரத்தாழ்வார். சக்கரத்தாழ்வார் வழிபாடு மிக சக்தி வாய்ந்தது என்றும், பல நன்மைகளைத் தரக் கூடியது என்றும் நம்பப்படுகிறது. சக்கரத்தாழ்வார் வழிபாட்டின் முக்கியத்துவமும், பலன்களும் தொடர்ந்து காண்போம். மனதிலுள்ள பயங்கள், மரண பயம், எதிரிகள் பயம் போன்றவற்றை நீக்கி, தைரியத்தையும், பாதுகாப்பையும் இவர் அருளுகிறார். கிரக தோஷங்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகளின் தொல்லைகளிலிருந்து விடுபட உதவுகிறார்.

- Advertisement -

வாழ்வில் ஏற்படும் தடைகள், சங்கடங்கள், துக்கங்கள், கடன் தொல்லைகள் போன்றவற்றை நீக்கி, நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அருளுகிறார். தரித்திரியத்தைப் போக்கி, சகல செல்வங்களையும் வாரி வழங்குவார். சுப காரியங்கள் தங்குதடையின்றி நடைபெற அருள் புரிவார். இவரை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.

சக்கரத்தாழ்வாரை வழிபாடு முறை:
சக்கரத்தாழ்வாரை புதன் மற்றும் சனிக் கிழமைகளில் வழிபடுவது சிறப்பு. ஆனி மாத சித்திரை நட்சத்திரம் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி திருநாளாகும். மாதந்தோறும் வரும் சித்திரை நட்சத்திர நாளிலும் வழிபடலாம். அதிகாலையிலேயே குளித்து சுத்தமாகி, பூஜை அறையை சுத்தம் செய்யவும். சக்கரத்தாழ்வார் படத்திற்கு/சிலைக்கு பூக்களால் அலங்கரிக்கவும். சந்தனம், குங்குமம் இட்டு வணங்கவும். நெய் தீபம் ஏற்றி, ஊதுபத்தி ஏற்றி வைத்து, தூபம் காண்பிக்க வேண்டும். மனதார சக்கரத்தாழ்வாரை நினைத்து, உங்கள் கோரிக்கைகளைச் சொல்லுங்கள்.

- Advertisement -

சக்கரத்தாழ்வார் மந்திரங்கள்:
1. “ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம”

2. “ஓம் சுதர்ஸனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரஸோதயாத்”

- Advertisement -

இந்த மந்திரங்களை 11, 24, 48, 54 அல்லது 108 முறை உங்களால் முடிந்த அளவுக்கு உச்சரிக்கலாம். துளசி மாலை சாத்தி, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யலாம். 12, 24 அல்லது 48 முறை சக்கரத்தாழ்வார் சந்நிதியை வலம் வந்து வணங்கலாம். நைவேத்தியமாகப் படைத்த பானகத்தை அல்லது புளியோதரை பிரசாதமாக விநியோகிக்கலாம். சக்கரத்தாழ்வாருக்கு பின்புறம் யோக நரசிம்மர் வீற்றிருப்பார். இருவரும் ஒரே நேரத்தில் தரிசிப்பது மிகவும் சிறப்பு.

இதையும் படிக்கலாமே:
வேலை வாய்ப்புக்கு வாஸ்து சாஸ்திரம்

பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சந்நிதி இருக்கும். ஸ்ரீரங்கம் கோயிலின் சக்கரத்தாழ்வார் மிகுந்த சக்தி வாய்ந்தவர். சக்கரத்தாழ்வார் எட்டு, பதினாறு அல்லது முப்பத்திரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். பொதுவாக 8 அல்லது 16 கரங்களுடன் அறுகோண சக்கரத்தில் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் காணப்படுவார். சக்கரத்தாழ்வாரை வணங்கும் பக்தர்களுக்கு, அவர் ஒரு அடி முன் வைத்தால், சக்கரத்தாழ்வார் இரண்டு அடி முன் வந்து அருள் புரிவார் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வாரை மனமுருகி, நம்பிக்கையுடன் வழிபடுவதால், சகல நன்மைகளையும் பெற்று, இன்பமாக வாழலாம்.

சற்று முன்