- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்தது நடக்க அரச இலை பரிகாரம்

நினைத்தது நடக்க அரச இலை பரிகாரம்

- Advertisement -

ஸ்ரீ அஸ்வத்த நாராயண சுவாமியை வணங்கிக் கொள்வோம். அரச மரத்தடியில் இருக்கும் நாராயணரின் நினைத்து செய்யக்கூடிய பரிகாரம் இது. இந்த மந்திரம் சிவபெருமானிடம் இருந்து, ராமருக்கு வழங்கப்பட்ட மந்திரம். ஆரண்ய காண்டத்தில் தனது சந்தோஷமான வாழ்க்கையை திரும்பி பெறுவதற்காக, சிவபெருமான் ராமருக்கு கொடுத்த மந்திரம் இது. நம்முடைய வாழ்க்கையிலும் சந்தோஷத்தை கொடுக்க கூடிய மந்திரம்.

சக்தி வாய்ந்த அந்த மந்திரம் என்ன. இந்த மந்திரத்தை எப்படி உச்சரிப்பது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

அரச மர இலை பரிகாரம்

இந்த பரிகாரம் செய்ய முதலில் அரச மரத்தின் இலை உங்களுக்கு தேவை. ஒரு அரச இலையை கொண்டு வந்து நன்றாக சுத்தம் படுத்தி ஒரு தாம்பல தட்டில் வைத்து அதன் மேலே மஞ்சளில் சுவஸ்திக் சின்னம் வரைந்து கொள்ளவும். அதற்கு மேலே கொஞ்சம் மஞ்சள், கொஞ்சம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த அளவு இந்த இரண்டு பொருட்களையும் வைத்து, பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை சொல்லி என்ன வரத்தை கேட்டாலும் கடவுள் உங்களுக்கு அதை தட்டாமல் கொடுத்து விடுவான்

அரசமர மந்திரம்

ஓம் நமோ நாராயணன் தேவம்
சங்கு சக்ர கதாதரம்
பக்தானாம் இஷ்ட தாதாரம்
சர்வ மங்கள காரகம்.

- Advertisement -

அரச மரத்து இலையை கையில் வைத்துக்கொண்டு, சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை வீட்டில் இருந்தபடியே செய்யுங்கள். அரசமரத்து இலையை வைத்து இந்த மந்திரத்தை சொல்லி, பூஜை அறையில், பூஜை செய்தால் உங்களுடைய வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும்.

இதையும் படிக்கலாமே: கணபதி மாலா மந்திர வரிகள்

நீங்கள் ராஜ வாழ்க்கையை வாழலாம் என்பது நம்பிக்கை. சிவபெருமானால் ராமருக்கு கொடுக்கப்பட்ட இந்த மந்திரத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் சந்தோஷத்துடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்