சில பேருக்கு சில நேரங்களில் எதிர்பாராத பணக்கஷ்டம் வந்து நெருக்கடியை கொடுத்து விடும். தகுதிக்கு மீறி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். உதாரணத்திற்கு எதிர்பாராத விபத்து, எதிர்பாராத நோய், எதிர்ப்பாராத நஷ்டம், எதிர்பாராத மருத்துவ செலவு, இவைகள் ஏற்படும் போது வீட்டில் இருப்பவர்களுக்கு பணத்தட்டுப்பாடு வந்துவிடும். இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால், என்ன செய்வது.
சில பேர் சுப செலவுகளுக்காக தகுதிக்கு மீறி கடன் வாங்கி கூட சிக்கிக் கொள்வார்கள். இப்படி எதிர்பாராத வகையில் நீங்கள் செய்த தவறு, விதி செய்த தவறால், பணகஷ்டத்தில் சிக்கியிருந்தால், அதிலிருந்து விடுபட ஏதாவது ஒரு வழியை இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுக்க வேண்டும். அந்த மகாலட்சுமி உங்களுக்கு பண வரவிற்கான வழியை காட்டிக் கொடுக்க வேண்டும் என்றால், என்ன பரிகாரம் செய்வது.
நேரம் காலம் நாள் கிழமை எதுவுமே பார்க்காதீங்க. எதிர்பாராமல் பண கஷ்டம் வந்திருச்சா. இந்த பரிகாரத்தை கண்களை மூடி செய்யுங்கள். எதிர்பாராத பண கஷ்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். அந்த கஷ்டத்தை எப்படி சரி செய்வது என்று நிச்சயம் உங்களுக்கு வழி தெரிந்துவிடும்.
பணம் கஷ்டத்திலிருந்து விடுபட பரிகாரம்
ஒரு கைப்பிடி கல்லுப்பு எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் கிழக்கு பக்கம் நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் முன்பு ஒரு சின்ன தாம்பூல தட்டை வைத்து, அதன் மேலே இந்த கல்லுப்பை வைத்து, அந்த கல்லுப்புக்கு மேலே ஒரு பச்சை கற்பூரத்தை வைத்து, ஏற்றி விடுங்கள். அந்த பச்சை கற்பூரம் எரியும் அல்லவா.
இப்போது உங்கள் முன் இருக்கும் அந்த நெருப்பு தான் மகாலட்சுமி, கல்லுப்புக்கு மேலே ஜோதியாக உங்களுக்கு காட்சி கொடுக்கின்றாள். அந்த கல்லுப்புக்கு மேலே இருக்கும் பச்சை கற்பூரம் எரிந்து முடியும் வரை, உங்களுடைய பண கஷ்டம் தீர வேண்டும் என்று மகாலட்சுமியை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். “ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை மூன்று முறை மனதார சொல்லி விடுங்கள்.
கற்பூரம் எரிந்து அணைந்த பிறகு அந்த கல் உப்பில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, உங்கள் கையை கொண்டு அந்த கல் உப்பை கரைத்து விட வேண்டும். இந்த கல் உப்பு கரைவது போல என்னுடைய பண கஷ்டம் கரைய வேண்டும் என்று வேண்டி அந்த தண்ணீரை அப்படியே கொண்டு போய் கால் படாத இடத்தில் கொட்டி விடுங்கள். வீட்டில் சிங்கிள் கூட அந்த தண்ணீரை கொட்டலாம் தவறு ஒன்றும் கிடையாது. சிங்கிள் எச்சில் பாத்திரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: ஆனி மாதம் சிறப்பான மாதமாக அமைய
எண்ணி அடுத்த மூன்று நாட்களில் விபரீதமான உங்கள் பண கஷ்டத்திற்கு, ஒரு விமர்சனம் கிடைத்துவிடும். ஏதாவது ஒரு ரூபத்தில் கடவுள் வந்து உங்களை காப்பாற்றி கொடுப்பான். நம்பிக்கையோடு இதை செய்யும் பட்சத்தில் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.