- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆனி மாதம் சிறப்பான மாதமாக அமைய

ஆனி மாதம் சிறப்பான மாதமாக அமைய

- Advertisement -

ஒவ்வொரு மாதம் தொடங்கும் பொழுதும் அந்த மாதம் சிறப்பான மாதமாக அமைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். போன மாதத்தில் நாம் பட்ட கஷ்டங்கள் எதுவும் இந்த மாதத்தில் வரக்கூடாது என்றும் நினைப்போம். அதேபோல் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி அடைய வேண்டும் என்றும் ஆசைப்படுவோம். இவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு ஆனி மாதத்தின் முதல் நாள் அன்று சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அந்த வழிமுறைகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஜூன் மாதம் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஆனி மாதம் பிறக்கிறது. அன்றைய நாளில் திருவோண நட்சத்திரம் இருக்கிறது. மேலும் அன்று இரவு பஞ்சமி திதியும் வருகிறது. இவை அனைத்தும் சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான மாதப்பிறப்பாக தான் ஆனி மாதப் பிறப்பு திகழ்கிறது. அந்த ஆனி மாத பிறப்பின் முதல் நாள் அன்று நாம் சில சூட்சமமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறோமோ இல்லையோ அவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது பின்பற்றினோம் என்றால் அந்த மாதம் சிறப்பு மிகுந்த மாதமாக அமையும்.

- Advertisement -

ஆனி மாதம் பிறக்கக்கூடிய நாளில் திருவோண நட்சத்திரம் வருகிறது என்பதால் திருவோண விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்து விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அன்று மாலை 6:00 மணி வரை விரதம் இருந்து ஆறு மணிக்கு மேல் பெருமாளை வழிபாடு செய்துவிட்டு விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

விரதம் இருக்க இயலாது என்பவர்கள் அன்றைய தினத்தில் வழிபாடை மட்டுமாவது செய்ய வேண்டும். மாலை 6:00 மணிக்கு பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கலவை சாதத்தை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பின்வரும் இந்த மந்திரத்தை 108 முறை கூறி வாசனை மிகுந்த மலர்களாலோ அல்லது துளசியாலோ பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

மந்திரம்

ஓம் நமோ வாமனரூபாய நமஹ

- Advertisement -

இப்படி விரதமும் இருக்க முடியாது, வழிபாடும் செய்ய இயலாது என்பவர்கள் அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வதன் மூலமும் அதிக அளவில் பலனை பெற முடியும். இதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினத்தில் சந்திரனை நாம் தரிசனம் செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் நல்ல ஒரு முன்னேற்றம் உண்டாகும். மிகவும் எளிமையான வழிமுறையாக திகழக்கூடிய இந்த வழிமுறைகளில் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையுமே பின்பற்றின்பவர்களுக்கு ஆனி மாதம் மிகவும் சிறப்பு மிகுந்த அற்புதமான மாதமாக திகழும்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க விநாயகர் மந்திரம்

ஒவ்வொரு மாதத்திற்கும் தனி சிறப்புகள் என்பது இருக்கும். அந்த சிறப்புகளை பொறுத்து தான் அந்த மாதத்தில் வழிபாடு செய்யும் முறையும் இருக்கும். அந்த வகையில் ஆனி மாதத்தில் நாம் இந்த முறையில் வழிபாடுகளை செய்ய நமக்கு இந்த மாதம் முழுவதும் சிறப்பு மிகுந்த மாதமாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்