- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆனி மாதம் முழுவதும் தன வசியம் ஏற்பட

ஆனி மாதம் முழுவதும் தன வசியம் ஏற்பட

- Advertisement -

ஒவ்வொரு ஆங்கில மாத பிறப்பிற்கும், தமிழ் மாத பிறப்பிற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நாம் செய்யக்கூடிய வழிப்பாடும் பரிகாரமும் அந்த மாதம் முழுவதும் நமக்கு பலனளிக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பலரும் மாதத்தின் முதல் நாள் அன்று பலவிதமான வழிபாடுகளையும் பரிகாரங்களையும் மேற்கொள்வார்கள். அந்த வகையில் ஆனி மாதத்தின் முதல் நாள் திருவோண நட்சத்திரத்துடன் சேர்ந்து வருகிறது என்பதால் பெருமாளுக்குரிய இந்த ஒரு பொருளை நாம் வீட்டில் வைப்பதன் மூலம் பெருமாளின் அருளால் தனவசியம் ஏற்படும். அந்த பொருள் என்ன அதை எப்படி வைப்பது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பெருமாளுக்கு உகந்த நட்சத்திரத்தில் ஒன்றாக திகழ்வதுதான் திருவோண நட்சத்திரம். திருவோண நட்சத்திர நாளில் பெருமாளை நாம் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட திருவோண நட்சத்திரம் அன்றுதான் ஆனி மாதத்தின் முதல் நாளும் பிறக்கிறது. அதனால் அன்றைய தினத்தில் கண்டிப்பான முறையில் பெருமாளை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதோடு ஒரு எளிமையான பரிகாரத்தையும் செய்தோம் என்றால் பெருமானின் அருளால் தனவசியம் உண்டாகும்.

- Advertisement -

ஆனி மாதத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலம் எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய நேரத்தில் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். முதலில் பெருமாளின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு துளசி மாலையை சாற்றி பெருமாளுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அன்றைய தினம் தங்களால் எந்த பொருளை நெய்வேத்தியமாக வைக்க முடியுமோ அந்த பொருளை நெய்வேதியமாக வைத்துக்கொண்டு ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்து பெருமாளுக்கு முன்பாக வைக்க வேண்டும்.

பிறகு பெருமாளுக்கு உகந்த தன வசியத்தை ஏற்படுத்தக்கூடிய பொருளாக திகழக்கூடிய பச்சை கற்பூரத்தை நான்கைந்து துண்டுகள் வைத்து ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த மூட்டையை பெருமாளின் பாதத்தில் வைத்து பெருமாளை முழு மனதோடு வழிபாடு செய்து தனவசியம் ஏற்பட வேண்டும், பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் விலக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மூட்டையை எடுத்து வீட்டின் தென்மேற்கு மூலையான குபேர மூலையில் மேலே கட்டி விட வேண்டும்.

- Advertisement -

தினமும் காலையிலும் மாலையிலும் பூஜையறையில் தீபம் ஏற்றி ஊதுபத்தி சாம்பிராணி போன்றவற்றை காட்டும் பொழுது இந்த மூட்டைக்கும் காட்ட வேண்டும். ஒரு மாதம் முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். அடுத்த மாதத்தின் பிறப்பு சமயத்தில் திரும்பவும் அந்த துணியை எடுத்து சுத்தம் செய்து மஞ்சளை தடவி திரும்பவும் பச்சை கற்பூரத்தை வைத்து பெருமாளை வழிபாடு செய்து அதே மூலையில் கட்டி விட வேண்டும். மிகவும் எளிமையான பரிகாரமாக தான் இந்த பரிகாரம் திகழ்கிறது. பண வசியத்தையும் தன ஆகர்சனத்தையும் ஏற்படுத்தக்கூடிய பச்சை கற்பூரத்தை நாம் இந்த முறையில் நம்முடைய வீட்டில் வைப்பதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும். இயன்றவர்கள் இதே போல் தயார் செய்து தங்களுடைய பர்ஸ்சிலும் வைத்துக் கொள்ளலாம். தொழில் செய்பவர்கள் அவர்களுடைய கல்லாப்பெட்டியிலும் வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: ஆனி மாதம் சிறப்பான மாதமாக அமைய

பெருமாளுக்குரிய பொருளை பெருமாளை நினைத்து இந்த முறையில் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் பெருமாளின் அருளால் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்குவதோடு தனவசியமும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்