முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு அனைத்து தினங்களும் உகந்த தினங்கள் என்றாலும் அவருக்கு சிறப்பு வாய்ந்த தினங்களாக கருதப்படுவது சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம், செவ்வாய்க்கிழமை போன்ற நாட்கள் தான். அந்த வகையில் இந்த முறை தேய்பிறை சஷ்டி என்பது செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருகிறது. என்னதான் தேய்பிறை சஷ்டி மதியம் 12: 45 மணியுடன் நிறைவடைந்தாலும் சூரிய உதயசமயத்தில் சஷ்டி திதி இருப்பதால் செவ்வாய்க்கிழமையுடன் வரக்கூடிய சஷ்டி திதியாக இதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இவ்வளவு சிறப்பு மிகுந்த நாளில் எந்த நேரத்தில் முருகனை வழிபாடு செய்தால் நமக்கு பண வசியம் ஏற்பட்டு கடன் பிரச்சினை தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
பண வசியம் ஏற்பட முருகன் வழிபாடு
கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு காரணமாக திகழக்கூடிய கிரகம் தான் செவ்வாய் கிரகம். அங்காரகன் என்று கூறக்கூடிய இந்த செவ்வாய் கிரகம் நம்முடைய ஜாதகத்தில் நீச்சமடைந்து இருக்கும் பட்சத்தில் நமக்கு கடன் பிரச்சினை என்பது ஏற்படும். இதோடு இன்னும் சில பிரச்சினைகளும் ஏற்படும் என்றாலும் பலரது பிரச்சினையாக திகழக்கூடிய இந்த கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு செவ்வாய் பகவானின் அதி தேவதையாக கருதப்படக் கூடிய முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் தேய்பிறை சஷ்டியுடன் சேர்ந்து வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பதால் அன்றைய தினத்தில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கடன் பிரச்சனை தேய்ந்து போகும் என்று கூறலாம்.
தேய்பிறை சஷ்டி திதி செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருகிறது என்பதை நாம் ஏற்கனவே சொல்லிவிட்டோம். எந்த நேரத்தில் நிறைவடைகிறது என்பதையும் சொல்லிவிட்டோம். முருகப்பெருமானை அன்றைய தினத்தில் நாம் கண்டிப்பான முறையில் வழிபாடு செய்வோம். அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்யும்பொழுது முருகப்பெருமானின் அருளை பரிபூரணமாக பெற முடியும். முருகப்பெருமானின் அருளால் பணவசியம் ஏற்பட்டு கடன் பிரச்சினையும் தீரும்.
அந்த நேரம் தான் காலை 5:30 மணியில் இருந்து 7:30 மணி மற்றும் காலை 10:30 மணியிலிருந்து 11:30 மணி. இந்த இரண்டு நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். வெறுங்கையை வீசிக்கொண்டு வழிபாடு செய்ய போகக்கூடாது. சிவப்பு நிற மலர்களை முருகப்பெருமானுக்கு வாங்கி கொடுத்து தீபம் ஏற்றி வைத்து மனம் உருக முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
ஒருவேளை நம்மால் ஆலயத்திற்கு செல்ல இயலவில்லை என்பவர்கள் வீட்டிலேயே வழிபாடு செய்யலாமா என்று கேட்பார்கள். வீட்டில் வழிபாடு செய்பவர்களும் இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து வீட்டில் இருக்கக் கூடிய முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்து தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும் பொழுது முருகப்பெருமானின் அருளை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: சஷ்டி திதியில் முருகன் அருள் பெற
முருகப் பெருமானின் தீவிர பக்தர்கள் கண்டிப்பான முறையில் அவருக்குரிய நாட்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். அதிலும் இந்த நேரத்தில் வழிபாடு செய்ய அவர்களுக்கு தேவையான பணவரவு உண்டாகும் தேவையற்ற கடன் கரைந்து போகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.