சூடு பட்டால் வெண்மையானது எப்படி உருகி போகிறதோ, அதேபோல உங்களுடைய கடன் சுமையையும் கரைந்து உருகி காணாமல் போகும். அந்த பைரவரின் கடைக்கண் பார்வையானது உங்கள் மீது விழுந்தால். இக்கட்டான கடன் சுமையில் சிக்கி இருப்பவர்கள் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை எப்படி வழிபாடு செய்வது? ஆன்மீகம் சார்ந்த சில குறிப்புகள் இந்த பதிவில் உங்களுக்காக.
தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு
இன்று 18ஆம் தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி திதியானது, காலை 10:58 மணிக்கு துவங்கி, மறுநாள் 19ஆம் தேதி காலை 8:58 மணி வரை இருக்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் பைரவர் வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். குறிப்பாக பார்த்தால் இன்று மாலை 6:30 மணிக்கு மேலாக இரவு நேரத்தில் பைரவர் வழிபாடு செய்வது சிறப்பு.
கடன் சுமையிலிருந்து வெளிவர, கடனை திருப்பி அடைக்க தேவையான பணத்தை பெற, வைரவருக்கு இன்று மாலை ஒற்றை செம்பருத்தி பூவால் மாலை கட்டி போட வேண்டும். 27 ஒற்றை செம்பருத்தி பூவை எடுத்து மஞ்சள் நிற நூலில் மாலை கட்டிக் கொள்ளுங்கள். பூவை ஊசியை வைத்து கோர்த்துக் கொண்டாலும் சரிதான். ஒவ்வொரு பூவை எடுத்து மாலை கட்டும்போதும் இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லிக் கொண்டே மாலை கட்டுங்கள். “ஓம் ஸ்ரீம் பைரவாய நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி மாலை கட்டிக் கொள்ளுங்கள்.
இந்த மாலையை பைரவருக்கு சாத்தி ஒரு சின்ன கிண்ணத்தில் வெண்ணெய் நெய்வேதியமாக வைத்து வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக உங்களுடைய கடன் சுமை குறையும். பைரவருக்கு சாதாரணமாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றினாலும் சரி அல்லது மிளகு தீபம் ஏற்றினாலும் சரி. அது உங்களுடைய சௌகரியம். இன்று புதன்கிழமை மாலை மேலே சொன்ன இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் கடன் சுமையிலிருந்து வெளிவரக்கூடிய பாக்கியம் கிடைக்கும்.
அந்த செம்பருத்திப் பூவுக்கு தன ஆகர்ஷன சக்தி அதிகமாக இருக்கிறது. அதன் நடுவில் இருக்கும் மகரந்த பூ, நேராக பிரபஞ்சத்தை நோக்கியவாறு இருக்கும். இந்த பூவைக் கட்டி எந்த தெய்வத்திற்கு மாலையாக போட்டு வேண்டிக்கொண்டாலும் உங்களுடைய வேண்டுதல் அதி விரைவாக பலிக்கும் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே: மீண்டும் மீண்டும் தங்கம் வாங்க
இன்று வந்திருக்கும் தேய்பிறை அஷ்டமி நாளில் மேல் சொன்ன முறைப்படி வழிபாட்டை மேற்கொண்டால் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.