தங்கம் என்பது மிகவும் உயர்ந்த உலோகமாக நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கனவாகவும் திகழக்கூடிய ஒன்றாக இருக்கிறது. தங்கத்தை வாங்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் பத்தாது. அந்த தங்கத்தை வாங்குவதற்குரிய பணத்தை சேர்க்க வேண்டும். அந்த பணத்தை சேர்க்க வேண்டும் என்றால் அதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும். அப்படி கடினமாக உழைத்தும் பணத்தை சேர்த்து வைத்தும் ஒரு சிலரால் தங்கத்தை வாங்க முடியாத சூழ்நிலை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் திரும்பத் திரும்ப தங்கத்தை வாங்கி சேர்ப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
தங்கம் வாங்க தீபம்
வண்ண வண்ண விளக்குகளை போட்டு தெய்வத்தை தரிசிப்பதை விட ஒரு தீப ஒளியில் தரிசிப்பது என்பது கோடி மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் சிறப்பு மிகுந்த ஆலயங்களில் தீபாராதனை காட்டும் பொழுது விளக்கை அணைத்துவிட்டு காட்டுவார்கள். அப்படி அந்த தீபச்சுடர் ஒளியில் நாம் இறைவனை தரிசனம் செய்வதற்கு நமக்கு கோடி கண்கள் தேவைப்படும். அந்த அளவிற்கு தீப ஒளி என்பது சிறப்பு மிகுந்த ஒன்றாக கருதப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அதை தீர்ப்பதற்கு தீப வழிபாடு ஒரு சிறந்த வழிபாடாகவே கருதப்படுகிறது.
அந்த வகையில் வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று இந்த தீப வழிபாட்டை நாம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். இந்த தீப வழிபாட்டிற்கு நமக்கு ஆறு வகையான எண்ணெய்கள் தேவைப்படும். அவை இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், மல்லிகை எண்ணெய், சம்மங்கி எண்ணெய். இந்த ஆறு எண்ணெய்களையும் சரிசமமான அளவு வாங்கி ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
இதை ஏற்றுவதற்கு மிகவும் சிறந்த விளக்காகத் திகழ்வது செம்பு விளக்கு. ஒருவேளை உங்களிடம் செம்பு விளக்கு இல்லை என்றால் அகல் விளக்கிலும் இந்த தீபத்தை ஏற்றலாம். வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:00 மணிக்கு மேல் வீட்டு நிலை வாசலுக்கு வெளியே கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இந்த எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். மாலை நேரத்தில் இந்த தீபத்தை ஏற்ற இயலாது என்று கூறுபவர்கள் அன்றைய தினம் அதாவது வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் நிலை வாசலில் இந்த தீபத்தை ஏற்றலாம்.
இப்படி வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று தொடங்கிய இந்த தீப வழிபாட்டை தொடர்ச்சியாக 48 நாட்கள் செய்ய வேண்டும். காலையில் ஏற்றுபவராக இருக்கும் பட்சத்தில் தொடர்ச்சியாக 48 நாட்களும் காலையில் ஏற்ற வேண்டும் அல்லது மாலையில் ஏற்றுபவர்களாக இருக்கும் பட்சத்தில் மாலையில் தொடர்ச்சியாக 48 நாட்கள் ஏற்ற வேண்டும். இரண்டு வேளையும் ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு. இப்படி செய்வதன் மூலம் அந்த எண்ணெய்களின் பலனாலும் தீபத்தின் பலனாலும் நாம் தங்கத்தை மீண்டும் மீண்டும் வாங்குவதற்குரிய வாய்ப்பு உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினை தேய தேய்பிறை அஷ்டமி வழிபாடு
இந்த எஅணெய்கள் அனைத்தையும் ஒருமுறை சேகரித்து வைத்துக் கொண்டால் போதும். தீபம் ஏற்றுவதற்கு நமக்கு அதிக அளவில் நேரம் செலவு ஏற்படாது. முழுமனதோடு, நம்பிக்கையோடும் இந்த தீபத்தை நிலைவாசலில் ஏற்றும் பொழுது கண்டிப்பான முறையில் அதிக அளவில் தங்கத்தை வாங்குவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.