நாம் செய்யும் வேலையும் வியாபாரமும் சிறப்பாக நல்ல வழியில் நடந்தாலே போதும். நம்முடைய வாழ்க்கை நல்லபடியாக நகர்ந்து செல்லும். வேலை இல்லை, வருமானம் இல்லை. வியாபாரத்தில் லாபம் இல்லை என்றால் நிச்சயம் நம்முடைய வாழ்க்கை கரடு முரடாகத்தான் இருக்கும். உங்களுடைய வியாபாரம் நன்றாக நடக்க, வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட, கைநிறைய பணம் சம்பாதிக்க, பிள்ளையாரை எப்படி கும்பிடுவது. எந்த மந்திரத்தை சொல்லி கும்பிடுவது, எந்த பூவை பிள்ளையாருக்கு வைத்து வழிபாடு செய்வது, ஆன்மீகம் சார்ந்த சில அரிய தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.
தினமும் பிள்ளையாரை, யார் ஒருவர் வழிபாடு செய்கிறீர்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் பெரிய அளவில் தடைகளோ துன்பங்களோ வரவே வராது. கெடுதல் செய்யும் கிரகங்கள் கூட, பணிவோடு உங்களுக்கு நன்மை செய்ய துவங்கிவிடும். பிள்ளையார் வழிபாடு அவ்வளவு சிறப்பான எளிமையான வழிபாடு.
விநாயகர் வழிபாடு
விநாயகருக்கு தினம்தோறும் வெள்ளை நிற செம்பருத்தி பூவை தினமும் வைத்துவிட்டு, உங்களுடைய வேலையை துவங்கிப் பாருங்கள். உங்கள் நாள் அதி அற்புதமாக இருக்கும். வியாபாரம் செய்யும் இடத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில், தண்ணீர் எடுத்து அந்த தண்ணீரில் கொஞ்சம் பச்சை கற்பூரம், மஞ்சள் தூள் சேர்த்து, ஒரே ஒரு வெள்ளை செம்பருத்தி பூவை மிதக்க விட்டால், லாபம் கொட்டி கொட்டி கிடைக்கும். சொன்னால் நம்ப மாட்டீர்கள். இது எளிமையான தாந்திரீக பரிகாரம். ஆனால், பெரிய அளவில் நன்மையை தரக்கூடியது. நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.
இந்த வெள்ளை செம்பருத்தி பூவை விநாயகருக்கு சாத்தும் போது, ஒரு அதிசக்தி வாய்ந்த பண வசியம் மந்திரத்தை சொல்லுங்கள். இந்த மந்திரத்தை சொல்லும் போது, சகலவிதமான பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீர்ந்து எல்லா வகையிலும் உங்களுக்கு லாபம் பெருக்கெடுக்க துவங்கும். பணத்தை வசியம் செய்யும் மந்திரம்.
பண வசியம் மந்திரம்
ஏகம் தனம் ஸர்வம் ஸித்திக்கும்
எளிமையாக மனப்பாடம் செய்து நீங்களே மனதிற்குள் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தாலும் சதாகாலமும் தனலட்சுமி உங்களிடம் வசியமாகிக் கொண்டே இருக்கும். வேலைக்கு கிளம்பும்போது விநாயகருக்கு ஒரு வெள்ளை செம்பருத்தி பூ வைத்துவிட்டு, இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு, வேலையை துவங்கி பாருங்கள். வேலையில் அபரிவிதமான முன்னேற்றம் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: தேய்பிறை அஷ்டமி காவலன் காலபைரவர் வழிபாடு
ப்ரமோஷன் சம்பள உயர்வு கிடைக்கும். நிம்மதி பிறக்கும். இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரமும், மந்திரமும் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.