இன்று புதன்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் தேய்பிறை அஷ்டமி திதி. பைரவரை வழிபாடு செய்ய இந்த நாள் மிக மிக உகந்த நாள். இன்று 18ஆம் தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி திதியானது, காலை 10:58 மணிக்கு துவங்கி, மறுநாள் 19ஆம் தேதி காலை 8:58 மணி வரை இருக்கிறது. இன்று இரவு நிறைந்த தேய்பிறை அஷ்டமி திதி முழுமையாக இருக்கிறது.
இந்த நாளில் இரவு நேரத்தில் நீங்கள் செய்யும் இந்த ஒரு எளிமையான பரிகாரம், உங்கள் வாழ்நாளில் இருக்கும் மொத்த கடன் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும். கலியுகத்து கடவுளான கால பைரவரை நம்பி இதை செய்யுங்கள். நீங்கள் எந்த விதத்திலும் எந்த சூழ்நிலையிலும் கைவிடப்பட மாட்டீர்கள்.
காவல் தெய்வம் பைரவர் வழிபாடு
இந்த உலகத்தின் 8 திசைகளையும் ஒட்டுமொத்தமாக காக்கும் அஷ்ட பைரவரை ஒரு முறை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அஷ்ட பைரவா நீயே எனக்கு துணையாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, உள்ளங்கைகளில் 8 மிளகு எடுத்துக் கொள்ளுங்கள், சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய மிளகு தான்.
வீட்டிற்கு வெளிப்பக்கம் வந்து விட வேண்டும். மொட்டை மாடி, நிலைவாசல், பால்கனி இப்படி ஏதோ ஒரு இடத்தில் கிழக்கு பார்த்தவாறு நின்று கொண்டு, உள்ளங்கைகளில் வைத்திருக்கும் மிளகை 8 முறை உங்கள் தலையை சுற்ற வேண்டும். வலது பக்கத்தில் இருந்து இடது பக்கம் எப்போதும் போல தலையை 8 முறை சுற்றும் போது “ஓம் ஹ்ரீம் மஹா அஷ்ட பைரவாய நமஹ” என்ற மந்திரத்தையும் எட்டு முறை சொல்லி முடித்து விடுங்கள். பிறகு எட்டு மிளகு, எட்டு திக்கில் தூக்கி எறிய வேண்டும்.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு இந்த 8 திசைகளும் ஒவ்வொரு மிளகு தூக்கி தூரம் போட்டு விட்டு வீட்டுக்குள். சென்று கை, கால்களை கழுவி விட்டு முகம் கழுவிக்கொண்டு தூங்கச் செல்ல வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆண்கள் யார் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: வேப்ப மரத்தை வெட்டக்கூடாது ஏன்?
என்னை பிடித்த தரித்திரம், கடன், கண் திருஷ்டி, ஏவல் பில்லி சூனியம் எதிர்மறை ஆற்றல், எதிரி தொல்லை எதுவாக இருந்தாலும் அது என்னை விட்டு விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இன்று இரவு தூங்க செல்லும் போது, இந்த பரிகாரத்தை செய்தால் அத்தனை கஷ்டமும் உங்களை விட்டு விலகி செல்லும். அவ்வளவு சக்தி வாய்ந்த பரிகாரம் அது. தேய்பிறை அஷ்டமி இரவு நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யும் போது பலன் அபரி விதமாக கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்கிறேன்.