- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதுன்பங்கள் தூரப் போக தேய்பிறை பிரதோஷ வழிபாடு

துன்பங்கள் தூரப் போக தேய்பிறை பிரதோஷ வழிபாடு

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் நம்முடைய கர்ம வினைகளே காரணமாக திகழ்கின்றன. அப்படிப்பட்ட கர்ம வினைகளை நீக்கக்கூடிய அற்புதமான தெய்வமாக திகழக்கூடியவர்தான் சிவபெருமான். சிவபெருமானை வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் படிப்படியாக நீங்கும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட சிவபெருமானுக்குரிய தேய்பிறை பிரதோஷ நாளில் எந்த முறையில் அவரை வழிபாடு செய்தால் நம்முடைய துன்பங்கள் விலகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தேய்பிறை பிரதோஷ வழிபாடு

சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாக திகழ்வது திங்கட்கிழமை. அதே போல் அவருக்கு உகந்த விரத நாளாக திகழ்வது பிரதோஷம். இவை இரண்டும் சேர்ந்து வரக்கூடிய பிரதோஷமாக தான் இந்த ஆனி மாதத்தின் தேய்பிறை பிரதோஷம் வருகிறது. அதாவது சோமவாரத்தில் வரக்கூடிய தேய்பிறை பிரதோஷமாக இந்த பிரதோஷம் திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கர்ம வினைகள் தீர்ந்து நமக்கு ஏற்பட்ட கஷ்டங்களும் விலகும் என்றே கூறலாம்.

- Advertisement -

பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக திகழ்வது மாலை நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் வரக்கூடிய பிரதோஷ நேரம் ஆகும். இந்த நேரத்தில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். ஒரு வேளை இந்த நேரத்தில் வழிபாடு செய்ய இயலாது என்பவர்கள் இரவு 10:30 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்துவிடலாம். இந்த வழிபாட்டை நாம் நம்முடைய வீட்டிலேயே செய்யலாம் என்பதை குறிப்பிடத்தக்கது.

கண்டிப்பான முறையில் வீட்டில் சிவபெருமானின் லிங்கம், பானலிங்கம், ஸ்படிகலிங்கம் என்று ஏதாவது ஒன்று இருக்கும். அப்படி இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கு அன்றைய தினம் நெய் அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி நெய் அபிஷேகம் செய்துவிட்டு சிவபெருமானுக்கு நெய் சாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிரதோஷ நாளில் நெய்யை பயன்படுத்தி சிவபெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போகும் என்றே கூறலாம். அவ்வாறு அபிஷேகம் செய்யக்கூடிய நெய் சுத்தமான பசு நெய்யாக இருக்க வேண்டும். பிறகு சிவபெருமானின் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூறி வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதன் மூலமும் சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெற்று கர்ம வினைகளை நீக்கலாம்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ஹர ஹர மஹாதேவாய நமோ நமக”

இதையும் படிக்கலாமே: பணம் தரும் எமகண்ட நேரம் மந்திரம்

இந்த பிறவியில் நாம் அனுபவிக்க கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் நம்முடைய கர்ம வினைகளே காரணம். அந்த கர்ம வினைகளை நீக்க கூடிய சிவபெருமானை முழுமனதோடு இந்த முறையில் வழிபாடு செய்ய நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்