எமகண்டம் என்று சொன்னாலே, எல்லோருக்கும் ஒரு பயம் வந்துவிடும். எமகண்ட நேரத்தில் நல்ல காரியம் செய்யக்கூடாது. எமகண்ட நேரத்தை பார்த்தாலே ஒரு பயம். ஆனால் இந்த எமகண்ட நேரத்திற்கு பின்னால் ஒரு சூட்சமம் மறைந்து, நமக்கு நல்லதை கொடுக்கப் போகிறது. வறுமையிலிருந்து நம்மை காப்பாற்றக்கூடிய நேரம், இந்த எமகண்ட நேரம். எமகண்ட நேரத்தில் வறுமையில் இருந்து விடுபட சொல்ல வேண்டிய மந்திரம் என்ன, ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.
பொருளாதார ரீதியாக நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் கஷ்டம் இருக்கிறது. அந்த பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால், எமகண்ட நேரத்தில் பெருமாளையும் பத்மாவதி தாயாரையும் வழிபாடு செய்ய வேண்டும். பெருமாளையும் பத்மாவதி தாயாரையும் எந்த நேரத்தில் வழிபாடு செய்தாலும், கை மேல் பலன் கிடைக்கும். பணக்கஷ்டம் தீரும்.
இருப்பினும் எமகண்ட நேரத்தில் இவர்களை நீங்கள் வழிபாடு செய்தால், உங்களுக்கு கோடான கோடி பணம் மழை கொட்டும். அந்த அளவுக்கு பெரிய அதிர்ஷ்டத்தை தரக்கூடிய சக்தி இந்த எமகண்ட நேரத்திற்குள் இருக்கிறது. தினமும் காலண்டரில் எமகண்ட நேரம் எப்போது வருகிறது என்று, காலையில் கண்விழித்த உடனேயே பார்த்து விடுங்கள்.
அந்த எமகண்ட நேரத்தில் 10 நிமிடம் ஒதுக்கி இந்த மந்திரத்தை மட்டும் 108 முறை சொல்லிவிட்டால் போதும். உங்களுடைய பண கஷ்டங்கள் விரைவாக குறையும். வருமானம் அதி விரைவாக அதிகரிக்க துவங்கிவிடும். நீங்கள் வேலையில் இருக்கலாம். வண்டியில் பயணம் செய்யலாம். கடை வைத்திருப்பவர்களாக இருக்கலாம்.
எந்த இடத்தில் இருந்தாலும் சரி, எமகண்ட நேரத்தில் ஒரு நிமிடம் பெருமாளை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி விடுங்கள். தாயாரை நினைத்து இந்த மந்திரத்தையும் சொல்லி விடுங்கள். 108 முறை சொல்ல நேரம் இல்லை என்றாலும் 27 முறை மட்டும் ஆவது எமகண்ட நேரத்தில் இந்த மந்திரத்தை உச்சரித்து பாருங்கள். உங்கள் பண கஷ்டத்திற்கு நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும்.
பெருமாள் மந்திரம்:
ஸ்ரீனிவாச கோவிந்தா
வெங்கடேசா கோவிந்தா
பத்மாவதி தாயார் மந்திரம்
ஓம் ஹ்ரீம் பத்மாவதியே வஷட்!
இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
முதலில் பெருமாளை நினைத்து, பெருமாள் மந்திரத்தை 27 முறை சொல்லி முடித்துவிட்டு பிறகு பத்மாவதி, தாயார் மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். வாய்ப்பு கிடைத்தால் நேரம் இருக்கிறது என்றால் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். தவறு கிடையாது. பூஜை அறையில் போக வேண்டும் விளக்கு ஏற்ற வேண்டும் எந்த கட்டாயமும் இல்லை. ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமென்றாலும் இந்த மந்திரத்தை எமகண்ட நேரத்தில் சொல்லலாம். ஞந்திரம் சீக்கிரம் சித்தியாகும். பணமழை சீக்கிரம் பொழியும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவு சமர்ப்பணம்.