இன்று 28-6-2025 சனிக்கிழமை, மதியம் 1:18 மணிக்கு சதுர்த்தி திதியானது பிறந்து விட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:58 மணி வரை சதுர்த்தி திதி இருக்கிறது. பொதுவாகவே சதுர்த்தி திதி வழிபாடானது மாலை நேரத்தில் செய்வது சிறப்பு. இன்று மாலை உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் நாளை காலை விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் வழிபாடு செய்ய வளமான வாழ்வை பெறலாம் என்பது நம்பிக்கை.
இருப்பதிலேயே மிக மிக எளிமையான வழிபாடு என்றால் அது விநாயகர் வழிபாடு தான். முழு முதல் கடவுளான விநாயகரை வழிபாடு செய்து விட்டு, நாம் ஒரு செயலை துவங்கினால் நிச்சயம் அது வெற்றி அடையும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. அந்த வகையில் பார்த்தால் தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதி, வளர்பிறையில் வரும் சதுர்த்தி திதி, இரண்டு சதுர்த்தி திதியிலும் எவர் ஒருவர் விடாமல் விநாயகர் வழிபாடு செய்கிறீர்களோ அவர்களுடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் விலகும். முன்னேற்றம் அபரிவிதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய வாழ்நாளில் இருக்கக்கூடிய துக்கங்கள் நீங்க வேண்டும் சந்தோஷம் பிறக்க வேண்டும் என்றால், இன்று இரவு தூங்கும் போது எந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
இன்று இரவு எல்லா வேலையும் முடித்து விடுங்கள். பிறகு முகம் கை கால்களை கழுவிக்கொண்டு, பெண்களாக இருந்தால் நெற்றியில் குங்குமம், ஆண்களாக இருந்தால் நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு படுக்க செல்வதற்கு முன்பு பூஜை அறையில் இருக்கும் விநாயகர் படத்தை வணங்கிக் கொள்ளுங்கள். அப்பொழுது விநாயகா என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் இன்றோடு முடிந்து விட வேண்டும்.
நாளை முதல் என்னுடைய வாழ்க்கையில் வளர்ச்சி அபரிவிதமாக இருக்க வேண்டும். வருமானம் பெருக வேண்டும். வியாபாரம் பெருக வேண்டும். சந்தோஷம் பல மடங்கு இரட்டிப்பாக வேண்டும். ஆரோக்கியம் பல மடங்கு பெருக வேண்டும் என்று மனம் உருக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் 108 முறை சொல்ல வேண்டும். முடியாதவர்கள் 27 முறை சொன்னாலும் சரிதான். ஆனால் இந்த மந்திரத்திற்கு ரொம்ப ரொம்ப பவர். இந்த மந்திரத்தை சொல்லி, நீங்க கேட்கக்கூடிய வரங்களை விநாயகர் அப்படியே கொடுத்துவிடுவார். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த மந்திரம் இது. இன்று இரவு தூங்குவதற்கு முன்பு சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரம் இதோ.
விநாயகர் மந்திரம்
ஓம் கிலீம் கணபதியே நமஹ !
கிலீம் என்ற வார்த்தைக்கு அதீத சக்தி உண்டு. விநாயகருக்கு உகந்த நாளில் இந்த மந்திரத்தை மட்டும் சொல்லிவிட்டு நீங்கள் என்ன பிராத்தனை வைத்தாலும் அது உடனே பலிக்கும். இன்று இரவு சூழ்நிலை காரணமாக உங்களால் இந்த வழிபாட்டை செய்ய முடியவில்லை மந்திரத்தை சொல்ல முடியவில்லை என்றாலும் கவலையே படாதீங்க.
நாளை ஞாயிற்றுக்கிழமை விநாயகர் வழிபாடு செய்வது அதி சிறப்பு. ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் சதுர்த்தி திதி இருக்கிறது. நாளை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு நேராக வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு போய் இரண்டே இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு அந்த விநாயகர் முன்பு அமர்ந்து விநாயகரை பார்த்தவாறு இந்த மந்திரத்தைச் சொன்னால் போதும். அவ்வளவுதான் நீங்கள் கேட்ட வரம் உடனே உங்களுக்கு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: நாளை 29-06-2025 ஆஷாட பஞ்சமி
நாளை காலை வெறும் வயிற்றில் இந்த மந்திரத்தைச் சொல்லும் போதும் உங்களுக்கு அபரிவதுமான பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகரை பற்றிய மேல் சொன்ன இந்த அரிய தகவலை இந்த நன்னாளில் உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.