- Advertisement -

நாளை 29-06-2025 ஆஷாட பஞ்சமி

- Advertisement -

இது ஆனி மாதம். ஆனி மாதத்தை ஆஷாட மாதம் என்றும் சொல்லுவார்கள். இந்த ஆனி மாதத்தில் தான் வாராஹிக்கு உரிய ஆஷாட நவராத்திரியும் கொண்டாடப்படும். ஆஷாட நவராத்திரி ஜூன் மாதம் 26 ஆம் தேதி துவங்கி, ஜூலை மாதம் 4ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த ஆஷாட நவராத்திரி அன்று வரவிருக்கும் பஞ்சமி திதியானது, நாளைய தினம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:58 மணிக்கு மேல் பிறக்கவிருக்கிறது.

இந்த திதி அடுத்த நாள் 30ஆம் தேதி, திங்கட்கிழமை மதியம் 1:08 மணி வரை இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாம் வாராஹி பஞ்சமி வழிபாட்டை மாலை நேரத்தில் செய்வது சிறப்பு. நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை, பஞ்சமி திதி வழிபாட்டை அனைவரும் அவரவர் வீட்டில் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

ஆஷாட பஞ்சமி வழிபாடு

வாராகி வழிபாடு எப்படி செய்வது என்று நம்மில் பல பேர் அறிந்த ஒரு விஷயமே. உங்களுடைய வீட்டில் வாராகியின் திருவுருவப்படம் இருந்தால், சிலை இருந்தால் அதற்கு என்னென்ன வழிபாட்டு முறைகள் இருக்கிறதோ அதை எல்லாம் பின்பற்றிக் கொள்ளுங்கள். வாராஹி திரு உருவப்படம் சிலை எது இருந்தாலும் அந்த வாராகிக்கு நாளைய தினம் கட்டாயமாக கிழங்கு வகைகளை அவித்து நெய்வேத்தியம் வைக்க வேண்டும். ஒரு சர்க்கரை பொங்கல், நெய்வேத்தியம் வைக்க வேண்டும். ஒரு டம்ளர் பானகம் வைக்க வேண்டும். நாளைய தினம் வாராகிக்கு அதி முக்கியமான நாள். ஆஷாட நவராத்திரி பஞ்சமி.

எங்கள் வீட்டில் வாராகியின் சிலை திருவுருவப்படம் எதுவுமே இல்லை. நாங்கள் என்ன செய்வது. நாளை மாலை 6:30 மணிக்கு மேல் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, உங்களால் முடிந்த பிரசாதம் செய்து பூஜை அறையில் வைக்கலாம். உங்கள் வீட்டில் இருக்கும் எந்த அம்மனையும் வாராகித் தாயாக நினைத்துக் கொள்ளலாம். வீட்டில் கருமாரியம்மன், மீனாட்சியம்மன், மாரியம்மன் என்று அம்மன்களின் திருவுருவப்படம் இருக்கும். அந்த அம்பாளை வாராஹி பாவித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஏற்றி வைக்கும் தீபத்தில் வாராகி அம்மனை ஆவாகனம் செய்துவிட்டு, மனம் உருக வாராகி இடம் உங்களுடைய பிரச்சனைகளை சொல்லுங்கள். வாராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிரி தொல்லை இருக்காது. கடன் சுமை இருக்காது. நோய் நொடி தொல்லை இருக்காது. வாராகி வழிபாடு செய்பவர்களிடம் வாலாட்டாதே என்ற பழமொழியே இருக்கிறது. ஆகவே நீங்கள் வராகிய கும்பிட்டால் உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வாழ்க்கையில் பெரியதாக தலைதூக்காது.

வராகிய மனமுருகி வழிபாட்டு இந்த 2 வரி மந்திரத்தை மட்டும் நாளை நீங்கள் மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருந்தால் போதும். பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். பஞ்சமி நாயகி பறந்து ஓடி வந்து உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பாள்.

- Advertisement -

ஆஷாட பஞ்சமி மந்திரம்

ஆஷாட பஞ்சமி பூஜண பிரியாயை நமோ நமஹ ஓம் .
வாராஹியே நமோ நமஹ ஓம்.

இந்த மந்திரத்தை உள்ன்போடு மனம் உருகி நம்பிக்கையோடு சொன்னாலே போதும். வாராஹி நவராத்திரியில் ஆஷாட பஞ்சமி திதியில் அவளுடைய அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைத்து விடும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நீங்கள் வாராஹி திருவுருவப்படம் வைத்திருந்து, சிலை வைத்திருந்தாலும் சரி, அவளுக்கு செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்து, இந்த மந்திரத்தை சொன்னால் லட்சம் அல்ல, கோடி கணக்கில் உங்களுக்கான ஆசீர்வாதம் கிடைத்துவிடும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

நாளை தினம் ஞாயிற்றுக்கிழமை, ராகு கால நேரத்தில் வாராகி வழிபாடு செய்வது சிறப்பு. நாளை மாலை 6:30 மணிக்கு மேல் இருள் சூழ்ந்த பிறகும் வாராகியை வழிபாட்டுக் கொள்ளலாம். அதுவும் சிறப்பான பலனை கொடுக்கும். வாராஹிக்கு நாளைய தினம் மஞ்சள் மாலை கட்டி போடலாம். வெற்றிலை மாலை கட்டி போடலாம். மாதுளம் பழம் முத்துக்களால் அர்ச்சனை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: 29-06-2025 நாளை மாணிக்கவாசகர் குருபூஜை

தேங்காய் தீபம் ஏற்றலாம், நெய் தீபம் ஏற்றலாம். நீங்கள் ஆசைப்பட்டு என்ன செய்தாலும் அதை அவள் மனநிறைவோடு ஏற்றுக்கொள்வாள். உங்களுக்கான ஆசீர்வாதங்களை வழங்கி விடுவாள். அவள் பெரிய உக்கிர தெய்வம் அல்ல. குழந்தை உள்ளம் கொண்ட, ஒரு தெய்வம். அவ்வளவுதான் அன்போடு பாசத்தோடு கூப்பிட்டால் ஓடி வந்து உங்கள் வீட்டிலேயே அமர்ந்து கொள்வாள். வாராஹியை பற்றி சொல்வதற்கு இனி வார்த்தை இல்லை. அவரவர் வழிபாடு செய்து அதை உணர்ந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்