நாம் ஒவ்வொருவரும் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். நம்முடைய வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது, அதையும் மீறி பிரச்சனைகள் வந்தாலும் அந்த பிரச்சினைகள் விரைவிலேயே தீர்ந்துவிட வேண்டும், நாம் செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும் என்றுதான் ஆசைப்படுவோம். இவை அனைத்தையும் ஒருசேர தரக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் விநாயகப் பெருமான். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக வளர்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி நாளில் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் அனைத்து விதமான வளங்களும் வளர்ந்து கொண்டே செல்லும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட வளர்பிறை சதுர்த்தி நாளில் ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பிரச்சினைகளை தீர்க்கும் சதுர்த்தி தீபம்
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு காலம், நேரம், கிழமை என்று எதுவுமே பார்க்காமல் அனுதினமும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். நவகிரகங்களையும் தன்னகத்தே கொண்ட விநாயகர் பெருமானை அனுதினமும் வழிபாடு செய்பவர்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்வதோடு தடைகளும் விலகி ஓடும் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்கு உரிய திதியான சதுர்த்தி திதி வரக்கூடிய நாளில் கூடுதல் சிறப்பாக நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது அவர் நமக்கு சிறப்பான பலன்களையே தருவார்.
அந்த வகையில் ஜூன் மாதம் 29ஆம் தேதி மதியம் 1:14 வரை சதுர்த்தி திதி என்பது இருக்கிறது. இது வளர்பிறை சதுர்த்தியாக இருப்பதாலும் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வருவதால் மிகவும் உகந்த ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்த நாளில் காலை பிரம்ம முகூர்த்த நிறமான 4:30 மணியிலிருந்து 5:30 மணிக்குள் அல்லது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அல்லது 7:45 மணியிலிருந்து 8:45க்குள் அல்லது 10:45 லிருந்து 11 45க்குள் இந்த ஒரு தீபத்தை நாம் ஏற்ற வேண்டும்.
இந்த நான்கு நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான விபூதியை பரப்பி அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கில் சுத்தமான நெய்யை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு மேற்கு திசை பார்த்தவாறு விநாயகப் பெருமானுக்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி முடித்த பிறகு விநாயக பெருமானுக்கு ஒரே ஒரு அருகம்புல்லை சமர்ப்பணம் செய்துவிட்டு அவரிடம் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும், தடைகள் அனைத்தும் விலக வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொண்டு 9 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: வளர்பிறை சூரிய சதுர்த்தி வழிபாடு
சிறப்பான தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடிய விநாயகப் பெருமானுக்குரிய சிறப்பான வளர்பிறை சதுர்த்தி நாளில் இப்படி சிறப்பான ஒரு தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.