- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசுப காரிய தடைகளை நீக்கும் பஞ்சமி வழிபாடு

சுப காரிய தடைகளை நீக்கும் பஞ்சமி வழிபாடு

- Advertisement -

வாராகி அம்மனுக்கு உகந்த நவராத்திரி ஆக ஆஷாட நவராத்திரி திகழ்கிறது. இந்த ஆஷாட நவராத்திரியில் வரக்கூடிய பஞ்சமி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நவராத்திரியில் வரக்கூடிய ஒன்பது நாட்களும் வாராகி அம்மனை வழிபாடு செய்யாதவர்கள் கூட பஞ்சமி திதி வரக்கூடிய நாளில் மட்டுமாவது வழிபாடு செய்ய வாராகி அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அப்படிப்பட்ட பஞ்சமி திதியில் சுபகாரிய தடைகளை நீக்குவதற்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சுப காரிய தடை நீங்க வழிபாடு

நமக்கு இருக்கக்கூடிய தடைகளையும், தடங்கல்களையும், துக்கங்களையும், துயரங்களையும், கஷ்டங்களை தரக்கூடிய எதிரிகளையும் நீக்கக்கூடிய ஒரு அற்புதமான தெய்வமாக திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்குரிய நவராத்திரியான ஆஷாட நவராத்திரியில் வாராகி அம்மனுக்குரிய பஞ்சமி திதி வரும் பொழுது அதற்கு அதீத சக்தி இருக்கும். அந்த வகையில் ஜூன் மாதம் 29ஆம் தேதி மதியம் 1: 15லிருந்து ஜூன் மாதம் 30 ஆம் தேதி மதியம் 1:13 வரை பஞ்சமி திதி இருக்கிறது. இந்த பஞ்சமி திதி இரவு தங்கக்கூடிய நேரத்தில் வாராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது பலவிதமான பலன்களை பெற முடியும்.

- Advertisement -

பஞ்சமி திதி இரவு இருக்கக்கூடிய நாளாக கருதப்படுவது ஜூன் மாதம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. அதனால் அன்று மாலை ஆறு மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள் வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்வது நல்ல பலனை தரும். அன்றைய தினத்தில் அசைவம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து வாராகி அம்மனின் படமோ சிலையோ இருக்கும் பட்சத்தில் அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

திருமணத்தடை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சரி எந்த ஒரு சுபகாரியம் செய்ய முயற்சித்தாலும் அதில் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது என்று நினைப்பவர்களும் சரி அன்றைய தினம் ஐந்து விரலி மஞ்சளை வாங்கிக் கொள்ள வேண்டும். விரலி மஞ்சள் நுனி உடையாமல் இருப்பதுபோல் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இதை கட்டுவதற்கு ஒரு மஞ்சள் நிற நூலையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை பூ கட்டுவது போல் கட்டி கொள்ள வேண்டும். கட்டிய இந்த விரலி மஞ்சள் மாலையை வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய வாராகி அம்மன் படத்திற்கு கீழ் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்பொழுது ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதில் மருதாணி இலைகளை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து ஐந்து முக அகல் விளக்காக இருக்கும் பட்சத்தில் மிகவும் சிறப்பு. அப்படி கிடைக்காத பட்சத்தில் ஐந்து அகல் விளக்குகளையோ அல்லது ஒரு அகல் விளக்கோ ஏற்றலாம். இதில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு தங்களுக்கு எந்த சுப காரியங்கள் தடைப்பட்டு இருக்கிறதோ அந்த தடைகள் முற்றிலும் விலக வேண்டும் விரைவிலேயே சுப காரியம் நடைபெற வேண்டும் என்று வாராஹி அம்மனை மனதார நினைத்துக் கொண்டு குங்குமத்தால் வாராகி அம்மனின் நாமத்தை கூறி அர்ச்சனை செய்யலாம்.

இவ்வாறு செய்து முடித்துவிட்டு நாம் கட்டி வைத்திருந்த விரலி மஞ்சள் மாலையை எடுத்துக்கொண்டு அருகில் வாராகி அம்மனின் கோவில் இருந்தால் அங்கு செல்லலாம் அல்லது ஏதாவது அருகில் வாராஹி அம்மன் கோவில் இல்லை என்பவர்கள் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று அந்த விரலி மஞ்சள் மாலையை அம்மனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சுப காரியங்களில் இருக்கக்கூடிய தடைகள் விலகும். திருமணம் நடைபெறாமல் இருக்கக்கூடியவர்கள் தீபம் ஏற்றுவதற்காக நாம் பயன்படுத்திய மருதாணி இலையை மறுநாள் எடுத்து அரைத்து தங்களுடைய உள்ளங்கையில் வைத்துக் கொள்வதன் மூலம் விரைவிலேயே திருமண யோகம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: 30-06-2025 கடன் தீர ஆனி மாத வழிபாடு

சாதாரணமாக வரக்கூடிய பஞ்சமி திதிக்கு பலன்கள் உண்டு. அதிலும் ஆஷாட நவராத்திரியில் வரக்கூடிய பஞ்சமி திதிக்கு சொல்லவே வேண்டாம். அப்படிப்பட்ட அற்புதமான வளர்பிறை பஞ்சமி நாள் அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்து சுப காரியங்கள் அனைத்தையும் சிறப்பாக செய்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்