ஒரு குடும்பத்திற்கு 24 மணி நேரமும் பாதுகாப்பாக கவசமாக இருப்பது, குலதெய்வத்தின் அருள் ஆசிதான். எந்த ஒரு குடும்பம் குலதெய்வத்தின் அருளோடு, ஆசிர்வாதத்தோடு இருக்கிறதோ, அந்த குடும்பம் செல்வ செழிப்போடு, சீரும் சிறப்புமாக இருக்கும். சில வீடுகளில் குலதெய்வத்தின் பரிபூரண ஆசி கிடைக்காது. குலதெய்வம் ஏதாவது கெட்ட சக்தியால் கட்டுப்பட்டு கிடக்கும்.
குலதெய்வத்தை கட்டி போட்டு விட்டார்கள் என்று சொல்லுவார்கள். இதுபோல பிரச்சனைகள் உங்கள் குடும்பத்தில் இருந்தால், நிலை வாசலிலேயே உங்கள் குலதெய்வம் இருக்கிறது, வீட்டிற்குள் வரவில்லை என்றால் குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவைக்க என்ன பரிகாரம் செய்வது. குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைக்க ஒரு எளிமையான விளக்கு பரிகாரமும், ஒரு எளிமையான மந்திரத்தை பற்றியும் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
குலதெய்வத்தை வீட்டிற்குள் வர வைக்க பரிகாரம்
உங்கள் வீட்டு குலதெய்வம் யார் என்பது உங்களுக்கு தெரியுமா. உங்க குலதெய்வம் எந்த கோவிலில் வாசம் செய்கிறது, என்பது உங்களுக்கு தெரியுமா. அந்த குல தெய்வ கோவிலுக்கு செல்லுங்கள். குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது எப்போதுமே பச்சரிசியும் வெல்லமும் வாங்கி எடுத்துச் செல்ல வேண்டும். உங்களால் அந்த கோவிலில் பொங்கல் வைத்து இறைவனுக்கு அந்த பொங்கலை படைத்து, தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்ய முடியும் என்றால், இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
இதற்கு வழி இல்லை என்றால் குலதெய்வ கோவிலில் சர்க்கரை பொங்கலையும், வெல்லத்தையும் வைத்து உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்துவிட்டு வீட்டிற்கு அந்த வெல்லம் பச்சரிசியை கொண்டு வந்து சர்க்கரைப் பொங்கல் செய்து, பூஜை அறையில் இருக்கும் குலதெய்வத்திற்கு முன்பு அந்த சர்க்கரைப் பொங்கலை வைத்து வழிபாடு செய்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பகிர்ந்து உண்ணுவது சிறப்பான பலனை தரும் இது முதல் பரிகாரம்.
பரிகாரம் 2
அடுத்தபடியாக குலதெய்வத்தை வீட்டிற்குள் வர வைக்க வேண்டும் என்றால், குலதெய்வ கோவிலுக்கு சென்று இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி குலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்க வேண்டும். குலதெய்வ கோவிலில் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வம் எப்போதும் என் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் குலதெய்வமான நீ அடிபணிய கூடாது. என்று வேண்டிக் கொள்ளுங்கள். எந்த கட்டிலும் நீ போய் சிக்கிக் கொள்ளக்கூடாது. என்ற குல தெய்வத்திடம் சத்தியம் வாங்கிக் கொண்டாலும் தவறு கிடையாது.
பிறகு “ஓம் க்ரீம் குல தேவதா நமஹ” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். கோவிலில் இந்த வேண்டுதலை முடித்துவிட்டு நேராக வீட்டிற்குள் வரவேண்டும். வீட்டிற்கு வந்து பூஜை அறையில் குலதெய்வ திரு உருவப்படத்திற்கு முன்பு ஒரு மண் அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்து விடுங்கள்.
அதாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று உங்களோடு வந்த குல தெய்வத்தை, வீட்டில் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி ஆவாகனம் செய்து விட்டீர்கள். இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வரும்.
ஒரே ஒரு இழுப்பெண்ணை தீபம் ஏற்றி குலதெய்வத்தை வழிபாடு செய்தால், ஆயிரம் நெய்திபம் ஏற்றி குலதெய்வ வழிபாடு செய்வதற்கு சமம். தினமுமே குலதெய்வ படத்திற்கு முன்பு இலுப்பெண்ணை தீபம் போட்டு வழிபாட்டை மேற்கொள்ளலாம். நல்லதே நடக்கும்.
இதையும் படிக்கலாமே: வெற்றி தரும் பிள்ளையார் மந்திரம்
உங்கள் குடும்பத்திலும் ஏதேனும் தீராத பிரச்சனைகள் இருந்தால் ஒரு முறை மேல் சொன்ன முறைப்படி குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். சனிக்கிழமை அன்று குலதெய்வ வழிபாடு செய்வது அதிசிறப்பான பலனை தரும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.