- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெற்றி தரும் பிள்ளையார் மந்திரம்

வெற்றி தரும் பிள்ளையார் மந்திரம்

- Advertisement -

நூற்றுக்கு நூறு கூட இல்லைங்க. ஒரு சதவிகிதம் கூடுதலாகவே சொல்லலாம். பிள்ளையாரை இப்படி கும்பிடுபவர்கள் வாழ்க்கையில், வேலையில், வருமானத்தில் பிரச்சனை என்பது வராதுங்க. நீங்க எழுதி கூட வச்சுக்கலாம். பிள்ளையார் வழிபாடு நம்முடைய வேலையை நிலை நிறுத்த செய்யும். வேலையில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யும்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலையை வாங்கிக் கொடுக்கும். இது நூற்றுக்கு, 101 சதவீதம் உண்மை. உங்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் தயவு செய்து 48 நாள் தவறாமல் பிள்ளையாரை இப்படி கும்பிடுங்கள். ஒரே ஒரு நாள் கும்பிட்டு விட்டு வழிபாட்டில் பலன் கிடைக்கவில்லை என்று நம்பிக்கையை தவறவிடக்கூடாது. மனிதர்களாகவே இருந்தால் கூட ஒரு முறை திரும்பி பார்க்கவில்லை என்றால், மீண்டும் மறுமுறை கூப்பிட்டு பார்ப்போம்.

- Advertisement -

இறைவனிடம் மட்டும் எதற்காக இந்த பாரபட்சம். ஒரே முறை வேண்டுதலை வைத்து விட்டு, எனக்கு வேண்டுதலே பலிக்கவில்லை என்று சொல்லக்கூடாது. வேண்டுதல் பலிக்கும் வரை, திரும்பத் திரும்ப இறைவனை கூப்பிட வேண்டும். இறைவன் நம்மை திருப்பிப் பார்க்கும் வரை அவனை கூப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கும்.

வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர

தினமும் காலையில், முடிந்தால் பிள்ளையார் கோவிலுக்கு போங்க. முடியவில்லை என்றால் வீட்டிலேயே குளித்து முடித்தவுடன், ஒரு இடத்தில் அமர்ந்து  என்னுடைய வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனையை சரி செய்து வையப்பா பிள்ளையாரப்பா, என்று சொல்லிவிட்டு “ஓம் கிலீம் கணபதியே நமஹ !” என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி விடுங்கள்.

- Advertisement -

குறைந்தபட்சம் 27 முறை சொல்லலாம். அதிகபட்சம் 108 முறை சொல்லலாம். அது உங்களுடைய விருப்பம். இந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல பிள்ளையார் நீங்கள் சொல்லும் பேச்சை எல்லாம் கேட்க துவங்கி விடுவார். நம்ப மாட்டீங்களா, பிள்ளையார் உங்க பேச்சை கேப்பாருன்னு சொன்னா நம்ப மாட்டீங்க. ஆனா இதில் இன்னொரு சூட்சம வித்தையும் மறைந்திருக்கிறது.

“ஓம் கிலீம் கணபதயே நமஹ” என்ற மந்திரம் இருக்கிறது அல்லவா. அந்த இடத்தில் கணபதி என்ற பெயரை தூக்கிவிட்டு, உங்களுக்கு தெரிந்தவர்கள் பெயரை போடுங்கள். உங்கள் பிள்ளையின் பெயர், கணவரின் பெயர் அல்லது யாருடைய பெயராக இருந்தாலும் சரி, அந்த இடத்தில் எந்த நபரின் பெயரை போடுகிறீர்களோ. அந்த நபர் நீங்கள் சொல்லும் பேச்சைக் கேட்டு நடக்க தொடங்கி விடுவார்கள். அந்த நபர் உங்களுக்கு வசியம் ஆகி விடுவார்கள்.

- Advertisement -

அதற்காக தப்பு தப்பான விஷயத்திற்கு எல்லாம் இந்த மந்திரத்தை பயன்படுத்தக் கூடாது. என்னுடைய கணவர் தவறான பழக்க வழக்கத்திற்கு அடிமையாகின்றார். அவரை நான் நல்வழி படுத்த வேண்டும் என்று, மனைவி இந்த பரிகாரத்தை செய்யலாம். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை தடம் மாறி போகிறது. என் பிள்ளை நான் சொல்லும் பேச்சைக் கேட்க வேண்டும் என்று சொல்லி இந்த மந்திரத்தில் பெயரை மாற்றிப் போடலாம். தவறான பாதைக்கு இந்த ஆன்மீகம் மந்திரத்தை பயன்படுத்தாதீங்க.

இதையும் படிக்கலாமே: செல்வ வளத்தை குவிக்கும் செம்பருத்தி பூ பரிகாரம்

அதற்கு பிள்ளையாரும் வழி விட மாட்டார். அது வேறு விஷயம். ஜாக்கிரதை தவறாக மந்திரத்தை பயன்படுத்தும் போது, பிள்ளையார் கட்டாயம் தண்டனை கொடுப்பார். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. மந்திரத்தை நல்லத்திற்கு மட்டுமே பயன்படுத்துங்கள். இந்த அதிசக்தி வாய்ந்த மந்திரம் மிகப்பெரிய பொக்கிஷம். இதுபோல விஷயங்களை யாரும் உங்களுக்கு சொல்லித் தர மாட்டாங்க. 48 நாள் இந்த மந்திரத்தை நீங்கள் சரியாக பயன்படுத்தினால், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் சரியாகும் என்பது நம்பிக்கை.

சற்று முன்