- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாழ்க்கையை வெற்றி மயமாக்கும் 369

வாழ்க்கையை வெற்றி மயமாக்கும் 369

- Advertisement -

369 என்ற அற்புதமான சேர்க்கை கொண்ட நாளாக இன்றைய நாள் திகழ்கிறது. இந்த நாளில் இந்த ஒரு வரியை மட்டும் நாம் பதினெட்டு முறை கூறினால் போதும் நம் வாழ்க்கையே தோல்வியாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்கு இந்த பிரபஞ்சம் நமக்கு அருள் புரியும். அப்படிப்பட்ட வழிமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வாழ்க்கையை வெற்றி மயமாக்கும் 369

இன்றைய தினம் 30 6 2025. தேதியின்படி கூட்டுத்தொகை மூன்று, மாதமும் 6, வருடத்தின் கூட்டுத்தொகை 9. அதனால் இன்றைய நாள் 3 6 9 என்ற அற்புதமான சேர்க்கை வருகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த மிராக்கிள் டே யாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் பிரபஞ்சத்திடம் என்ன கேட்கிறோமோ அது அப்படியே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட அற்புதம் வாய்ந்த நாள் திரும்பவும் 2034 ஆம் ஆண்டு தான் வரும் என்பதால் இன்றைய நாளை நம் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு எல்லாமே கிடைத்துவிட்டால் நாம் ஒரு சிறந்த வெற்றியாளனாகவே திகழ்வோம். ஏதாவது ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்தால் கூட நாம் வெற்றியாளனாக கருத மாட்டோம் அல்லவா? அதனால் அனைத்திலும் நாம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் நாம் வெற்றியாளனாக திகழ வேண்டும். அப்படி திகழ்வதற்கு பிரபஞ்சத்திடம் நாம் கேட்க வேண்டிய ஒரே ஒரு வரி இருக்கிறது. அதுதான் “நான் என்றென்றும் வெற்றியாளனாக திகழ்வேன்” என்பது.

இந்த வார்த்தையை இன்றைய தினம் காலையில் மூன்று முறையும், மதியத்தில் ஆறு முறையும், இரவு படுக்கச் செல்வதற்கு முன் ஒன்பது முறையும் கூறிவிட்டு படுத்தாலே போதும். வீட்டில் இருக்கக்கூடிய கண்ணாடிக்கு முன்பாக நின்று கொண்டு மகிழ்ச்சியாக இந்த ஒரு வரியை கூற வேண்டும். இப்படி நாம் கூறுவதன் மூலம் நம்மை அறியாமலேயே நேர்மறை ஆற்றல்கள் நம்முள்ளே உண்டாகும்.

- Advertisement -

நம்முடைய சொல்லிற்கும் அதிக அளவில் சக்திகள் இருக்கிறதுஇருக்கிறது. அதனால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்று கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சொற்களை நாம் நேர்மறையான சொற்களாக பயன்படுத்தும் பொழுது நம்முடைய வாழ்க்கையும் நேர்மறையாகவே அமையும். அதுவும் இதுபோன்ற அற்புதமான எண் சேர்க்கை கொண்ட நாட்களில் நேர்மறையான வார்த்தைகளை உபயோகப்படுத்துவதன் மூலம் நம் வாழ்வில் பலவிதமான அற்புதமான பலன்களை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைக்க பரிகாரம்

இந்த பிரபஞ்சத்தின் மேல் முழு நம்பிக்கை வைத்து இந்த ஒரு வரியை முழுமனதோடு மகிழ்ச்சியோடு இன்றைய நாளில் கூறுபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை வெற்றி மயமானதாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்