- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilசரும பளபளப்பை தரும் ஜாதிக்காய்

சரும பளபளப்பை தரும் ஜாதிக்காய்

- Advertisement -

என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்றால் சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும். சருமம் பளபளப்பாக இருப்பதற்கு சரும வறட்சி என்பது இருக்கக்கூடாது. இப்படி சரும வறட்சி இல்லாமல் முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கும் இயற்கையான முறையில் இளமையாக இருப்பதற்கும் பலவிதமான வழிமுறைகள் இன்றைய காலத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றன. சருமம் என்றும் இளமையாகவும் பளபளப்பாகவும் இருப்பதற்கு சருமத்தில் ஒருவித புரதச்சத்து தேவை. அதைத்தான் கொலாஜின் என்று கூறுகிறோம். இந்த புரதச்சத்து நம்முடைய சருமத்தில் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய சருமம் பளபளப்பாகவும் அதே சமயம் இளமையாகவும் தென்படும். அந்த கொலாஜினை எப்படி நம்முடைய சருமத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்வதற்கு கொலாஜின் உதவுகிறது என்பது நமக்கு நன்றாக தெரியும். கொலாஜின் உற்பத்தி குறைந்துவிட்டால் சருமத்தில் வறட்சி ஏற்படும். வறட்சியின் காரணமாக சுருக்கங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். இதன் விளைவாக முதுமை தோற்றம் ஏற்படும். இந்த கொலாஜின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், குறையாமல் பார்த்துக் கொள்வதற்கும் நமக்கு உதவக்கூடிய முக்கியமான ஒரு பொருள் என்றால் அது ஜாதிக்காய் தான். ஜாதிக்காயை நம்முடைய சருமத்திற்கும் பயன்படுத்தலாம். அதே சமயம் உட்புறமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இப்படி எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான அளவு கொலாஜினை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். ஜாதிக்காயை எப்படி பயன்படுத்தினால் கொலாஜின் உற்பத்தி சீராக இருக்கும் என்றுதான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

முதலில் முக வெளி தோற்றத்திற்கு ஜாதிக்காயை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம். இதற்கு நமக்கு ஜாதிக்காய் தூள் வேண்டும். முழு ஜாதிக்காயாக இருக்கும் பட்சத்தில் அதை மஞ்சள் உரசும் கல்லில் போட்டு உரசிக் கொள்ளலாம். இதனுடன் பன்னீர், தண்ணீர் மற்றும் பால் இவற்றை சரிசமமாக சேர்த்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து நம்முடைய சருமத்தில் பூச வேண்டும். 20 நிமிடம் கழித்து இதை கழுவி விட வேண்டும். இப்படி கழுவுவதன் மூலம் நம்முடைய சருமத்திற்கு முகவறட்சி என்பது படிப்படியாக குறையும், சருமமும் பளபளப்பாக இருக்கும்.

ஆளி விதைகளில் அதிக அளவில் ஒமேகா திரி இருக்கிறது. இது கொலாஜின் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதால் ஏதாவது ஒரு ரூபத்தில் தினமும் ஆளி விதையை நாம் உட்கொள்ள வேண்டும். இதோடு சேர்த்து இரவு படுக்கச் செல்லும் பொழுது ஜாதிக்காயையும் நாம் உட்கொள்ள வேண்டும். ஜாதிக்காயை உட்கொள்வதற்கு மதிய நேரத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சியா விதைகளை ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்து இந்த சியா விதைகளை இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக எடுத்து இதனுடன் 1/4 ஸ்பூன் அளவிற்கு ஜாதிக்காய் பொடியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் மூன்று நான்கு சொட்டு எலுமிச்சை சாறையும் கலந்து அருந்த வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலமும் நம்முடைய உடலில் கொலாஜின் உற்பத்தி என்பது அதிகரிக்கும். இதை நாம் தொடர்ச்சியாக சாப்பிடுவதால் நம்முடைய சருமம் இளமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய உடலுக்கும் பலவிதமான நன்மைகள் ஏற்படும். அதிலும் முக்கியமாக எலும்பு தேய்மானம் என்பது படிப்படியாக குறையும் எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: உளுந்து பேஸ் பேக்

நாட்டு மருந்து கடைகளிலும், அனைத்து விதமான மளிகை கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஜாதிக்காயை இந்த முறையில் பயன்படுத்துபவர்கள் 50 வயது ஆனாலும் இளமை தோற்றத்துடன் திகழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்