- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆனி திருமஞ்சன நாளில் வாங்க வேண்டிய பொருட்கள்.

ஆனி திருமஞ்சன நாளில் வாங்க வேண்டிய பொருட்கள்.

- Advertisement -

சிவபெருமானின் வடிவங்களில் ஒன்றாக திகழ்பவர் தான் நடராஜர். இவருக்கு வருடத்தில் ஆறு முறை மட்டும்தான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அப்படி ஆறு முறை நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனைகளில் 2 முறை மட்டும் தான் விடியற்காலையில் அபிஷேகங்கள் நடைபெறுமாம். அப்படி விடியற்காலையில் நடக்கக்கூடிய அபிஷேகங்களில் ஒன்றாக திகழ்வதுதான் ஆனி மாத வளர்பிறையில் வரக்கூடிய உத்திர நட்சத்திர நாள். அன்றைய தினத்தை தான் நாம் ஆனி திருமஞ்சனம் என்று கூறுகிறோம். அந்த நாளில் சிவபெருமானின் அருளை பெறுவதற்கு வாங்க வேண்டிய பொருட்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆனி திருமஞ்சன நாளில் வாங்க வேண்டிய பொருட்கள்

சிவ அருள் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவர்களுக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகள் அனைத்தும் விலகும் என்றே கூறலாம். ஒருவருக்கு கர்ம வினைகள் விலகி விட்டாலேயே அவர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடி ஆகும். மேலும் சிவக்கதி அடைவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்றே கூறப்படுகிறது. பலரும் சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு முக்கிய காரணம் பிறவா நிலை அடைய வேண்டும் என்பதுதான். இந்த பிறவா நிலையை அடைவதற்கும் சிவபெருமானின் அருள் என்பது வேண்டும். அப்படிப்பட்ட சிவபெருமானின் அருளை பெறுவதற்கு அவருக்குரிய அம்சம் பொருந்திய பொருட்களை நாம் வாங்கி வைக்க வேண்டும்.

- Advertisement -

அப்படிப்பட்ட பொருட்களுள் சில பொருட்களை ஆனி திருமஞ்சன நாளில் வாங்கி வைப்பதன் மூலம் சிவ அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். மேலும் செல்வ செழிப்பும் உயரும் என்றே கூறலாம். அதன் அடிப்படையில் முக்கியத்துவம் மிகுந்த முதல் பொருளாக திகழ்வதுதான் சிவபெருமானுக்குரிய ருத்ராட்சம். இந்த ருத்ராட்சத்தில் ஐந்து முக ருத்ராட்சம் என்பது பொதுவான ருத்ராட்சமாக கருதப்படுகிறது. இந்த ஐந்து முக ருத்ராட்சத்தை வாங்கி நம்முடைய கழுத்தில் அணிகிறோமோ இல்லையோ பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யும்பொழுது சகல விதமான நன்மைகளும் செல்வ செழிப்பும் உண்டாகும்.

அடுத்ததாக வெட்டி வேர். நடராஜருக்கு அணிவிக்கக்கூடிய மாலைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் வெட்டி வேர் மாலை அதனால் வெட்டி வேறால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு தெய்வத்தின் உருவத்தை வாங்கி வீட்டு பூஜை அறையில் வைப்பதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய நோய் நொடிகள் மு ற்றிலும் நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். இழந்த செல்வத்தை நம்மால் திரும்ப பெற முடியும். அடுத்ததாக சிவபெருமானுக்கு உரிய மலர்களுள் ஒன்றாக திகழ்வது தாமரை மலர். தாமரை மலரிலிருந்து கிடைக்கக்கூடியதே தான் தாமரை விதை. இந்த தாமரை விதையை வாங்கி வைத்து வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமி கடாட்சத்தை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

ஆனி திருமஞ்சனம் புதன்கிழமை வருகிறது என்பதால் புதன் பகவானுக்குரிய பச்சை பயிரையும் வாங்கி வைத்து வழிபாடு செய்யலாம். அடுத்ததாக ஏதாவது ஒரு அபிஷேக பொருளை வாங்கி வைத்து வழிபாடு செய்யும்பொழுது சகல விதமான நன்மைகளும் உண்டாகும். சிவபெருமான் அபிஷேக பிரியராக கருதப்படுகிறார். அவருக்கு வாங்கக்கூடிய அபிஷேகப் பொருட்களுள் மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய மஞ்சள், விபூதி, திருமஞ்சன பொடி, பன்னீர் போன்ற ஏதாவது ஒன்றை வாங்கி வைத்து வழிபாடு செய்யும்பொழுது அவர் மனம் மகிழ்ந்து நாம் வேண்டியதை நமக்கு அருள்வார்.

இதையும் படிக்கலாமே: மோசமான தலையெழுத்தை மாற்றும் ஆனி திருமஞ்சனம்

மேல் சொன்ன சிவ அம்சம் பொருந்திய இந்த பொருட்களுள் ஏதாவது ஒன்றையோ அல்லது இயன்றவர்கள் அனைத்தையுமே வாங்கி வைத்த ஆனி திருமஞ்சன நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்ய அவரின் பரிபூரணமான அருள் கிடைக்கும். வேண்டிய வரத்தை அருள்வார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்