நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம்மை போல் யாரும் கஷ்டப்படக்கூடாது, நமக்கு இருக்கக்கூடிய தலைவிதி போல் யாருக்கும் இருக்கக் கூடாது என்று நினைத்திருப்போம். ஒரு சிலருக்கு பிறந்தது முதல் இன்று வரை கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களால் நல்லவிதமான வாழ்க்கையும் வாழ்ந்திருக்க இயலாத ஒரு சூழ்நிலையில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய தலையெழுத்தை மாற்றுவதற்கும் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டு சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கும் ஆனி திருமஞ்சன வழிபாடு உதவி செய்யும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
மோசமான தலையெழுத்தை வழிபாடு
நடராஜ பெருமானுக்கு சிறப்பு மிகுந்த அபிஷேகங்களில் மிகவும் முக்கியமான ஒரு அபிஷேகமாக திகழ்வது மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை. அதேபோல் ஆனி மாதத்தில் வரக்கூடிய உத்திர நட்சத்திர நாள் அன்று செய்யக்கூடிய திருமஞ்சனம். இந்த திருமஞ்சன அபிஷேகத்தில் யார் ஒருவர் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்கிறார்களோ? அவர்கள் வாழ்வில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மாறும் என்றே கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் வீட்டில் எளிமையாக வழிபாடு செய்யும் முறையை இப்பொழுது பார்ப்போம்.
வீட்டில் சிவபெருமானின் சிலை, லிங்கம் போன்ற எது இருந்தாலும் அதற்கு கண்டிப்பான முறையில் ஆனி திருமஞ்சன நாள் அன்று அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த அபிஷேகத்தை ஜூலை மாதம் இரண்டாம் தேதி புதன்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4 மணியிலிருந்து 5 மணிக்குள் செய்துவிட வேண்டும். அதிகப்படியான அபிஷேகங்கள் எதுவும் செய்யவேண்டியது கிடையாது. நாட்டு மருந்து கடைகளில் திருமஞ்சன பொடி என்று கிடைக்கும். அந்த பொடியை வாங்கி வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தாலே போதும்.
பிறகு சிவபெருமானுக்கு வாசனை மிகுந்த மலர்களையும், வில்வ இலைகளையும் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு சிவபெருமானுக்கு காய்ச்சிய பசும்பாலை நெய்வேத்தியமாக வைக்கலாம் அல்லது கலவை சாதத்தை நெய்வேத்தியமாக வைக்கலாம். இப்படி வைத்து விட்டு சிவபெருமானின் பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூறி வில்வ இலைகளாலும் வாசனை மிகுந்த மலர்களாலும் அர்ச்சனை செய்யும் பொழுது சிவபெருமானின் அருளால் நம்முடைய தலையெழுத்து மாறும். ஒருவேளை வீட்டில் சிவபெருமானின் சிலையோ அல்லது லிங்கமோ இல்லாதவர்கள் இதே வழிமுறையை சிவபெருமானின் படத்திற்கு முன்பாகவும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மந்திரம்
“ஓம் தில்லைவாழ் நடராஜப் பெருமானே போற்றி ஓம்”
இதையும் படிக்கலாமே:முருகன் அம்சத்துடன் 5 ராசிகள்
சிவபெருமானின் ஒரு ரூபமாக திகழ்பவர் தான் நடராஜர். அப்படிப்பட்ட நடராஜருக்குரிய சிறப்பு மிகுந்த நாள்களில் ஒன்றான ஆனித் திருமஞ்சன நாளன்று வீட்டில் எளிமையான முறையில் இப்படி பூஜை செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்வில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பறந்து போகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.