- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபஞ்சபூதங்களின் மூல மந்திரம்

பஞ்சபூதங்களின் மூல மந்திரம்

- Advertisement -

இந்த பூமியில் ஒரு மனிதன் நல்லபடியாக வாழ வேண்டும் என்றால், அதற்கு இந்த பஞ்ச பூதங்களின் ஆசிர்வாதம் நிச்சயம் தேவை. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு இந்த 5 பஞ்சபூதங்கள் இல்லாமல் இந்த பூமி இயங்க முடியாது. மனிதர்கள் மட்டும் அல்ல, புழு பூச்சி மரம் செடி கொடிகளால் கூட, நிச்சயமாக பஞ்சபூதத்தின் உதவி இல்லாமல் வாழ முடியாது.

அப்பேற்பட்ட பஞ்ச பூதங்களின் மூல மந்திரத்தை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்களுக்கு பஞ்சபூதங்களில் ஏதாவது ஒரு பூதத்தினால் பிரச்சனை அல்லது ஏதாவது ஒரு பூதம் உங்களுக்கு நல்லது செய்ய வேண்டும், ஒரு பஞ்சபூதத்தினுடைய உதவி உங்களுக்கு தேவை என்றால், அப்போது இந்த மூல மந்திரத்தை சொல்லி அந்த பஞ்சபூதத்தை வேண்டிக் கொண்டால், அதற்கான நன்மைகள் நடக்கும்.

- Advertisement -

உதாரணத்திற்கு தண்ணீரே இல்லாத இடம், தண்ணீரால் வாடி வதைக்கும் கிராமத்தில் இந்த நீரின் மூல மந்திரத்தை சொல்லி, வருண பகவானை பிரார்த்தனை செய்தால் அந்த இடத்தில் மழை பெய்து, அந்த நிலத்தில் நீர் ஊறும். அந்த ஊருக்கு தண்ணீரால் வரக்கூடிய பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. இதுபோல இந்த மந்திரத்தை நீங்கள் கஷ்டம் வரும்போது பயன்படுத்தலாம்.

தினமும் பஞ்சபூதத்திற்கு நன்றி சொல்லி, பஞ்சபூதத்தால் எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்படக்கூடாது என்று வேண்டிக் கொண்டும் இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லலாம். பஞ்சபூதங்களின் ஆசிர்வாதம் தினமும் நமக்கு கிடைத்தால் நம்முடைய வாழ்வு சுபிட்சம் பெறும் என்பதும் நம்பிக்கை  சரி அந்த பஞ்சபூதங்களின் மந்திரம் தான் என்ன அதை கொஞ்சம் சொல்லுங்களேன்.

- Advertisement -

பஞ்சபூதங்களின் மூலமந்திரம்

லம் – பூமி
வம் – நீர்
ரம் – நெருப்பு
ஹம் – காற்று
யம் – ஆகாயம்

இவ்வளவு தான். இந்த பஞ்சபூதங்களினுடைய மூல மந்திரம் என்பது பஞ்சபூதங்களோடு நம்மை சீக்கிரமாக கொண்டு சேர்த்து இணைப்பது. திடீரென்று நெருப்பின் மூலம் ஏதோ ஒரு ஆபத்து என்று வைத்துக் கொள்வோம். அதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் “ரம் ரம்” என்ற வார்த்தையை மனதிற்குள் சொல்லி அந்த அக்கினி பகவானை வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயம் வரும் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: 7-7-25 நாளை, 777 அதிசக்தி வாய்ந்த பிரபஞ்ச வசிய நாள்

ஆபத்து வரும்போது மட்டும் கிடையாது, நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த மந்திரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பஞ்சபூதங்களின் ஆசிர்வாதத்தை ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும் என்பதற்காக இந்த ஆன்மீகம் சார்ந்த அரிய தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மனமகிழ்ச்சியுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்