- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்பட

குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்பட

- Advertisement -

ஒருவர் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் அவருக்கு எப்படி பணம் தொடர்பான எந்த பிரச்சினைகளும் இல்லாமல் இருக்க வேண்டுமோ அதே போல் தான் குடும்பத்திலும் எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் இருக்க வேண்டும். பணத்தால் ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் நம்மால் சமாளித்து விட முடியும். ஆனால் குடும்பத்தில் ஒரு பிரச்சனை வந்துவிட்டால் நம்மால் அதை சமாளிக்கவே முடியாது. நிம்மதி என்பதை முற்றிலும் இழந்து விடுவோம். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சரி அல்லது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சரி இதே நிலைதான் தொடரும். அப்படிப்பட்ட குடும்பம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்வதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்பட

நமக்கு அமையக்கூடிய வாழ்க்கைத் துணை நம்மை புரிந்து கொண்டு அனுசரித்து இருந்தால்தான் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். அதே போல் தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமையும் அன்னியோன்யமும் அதிகரிக்கும் பொழுது தான் அவர்களுக்கு இடையே எந்தவித சண்டை சச்சரவுகளும் ஏற்படாது. மேலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களும் சரி, பிறந்த குழந்தை சொல் பேச்சு கேட்காமல் தன் இஷ்டத்திற்கு இருந்தாலும் குடும்பத்தில் பிரச்சினை என்பது உண்டாகும். இவை அனைத்தையும் சரி செய்வதற்கும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கவும், அன்யோனியம் பெருகவும், குழந்தைகள் சொல் பேச்சு கேட்கவும், குழந்தை பாக்கியம் உண்டாகவும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை திங்கட்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் காலை நேரத்தில் சூரிய உதயசமயத்தில் செய்து விட வேண்டும். இதற்கு நமக்கு இரண்டு பொருட்கள் தான் வேண்டும். ஒன்று பச்சை கற்பூரம் மற்றொன்று பெயர் சொல்லாதது என்று கூறக்கூடிய வசம்பு. இவை இரண்டையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து தனித்தனியாக டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் பூஜை அறையிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.

திங்கட்கிழமை அன்று காலையில் குளித்து முடித்துவிட்டு ஒரு சுத்தமான டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டம்ளர் நிறைய சுத்தமான தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை பச்சை கற்பூர தூளையும், ஒரு சிட்டிகை வசம்பு பொடியையும் சேர்த்து அப்படியே படுக்கையறையில் யார் காலும் படாத அளவிற்கு வைத்து விட வேண்டும். அவ்வளவுதான் பரிகாரம் முடிந்துவிட்டது. ஒரு வாரம் முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். அடுத்த வாரம் திங்கட்கிழமை அன்று காலையில் இந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு, அந்த டம்ளரை சுத்தம் செய்து திரும்பவும் புதிதாக தண்ணீர் ஊற்றி இந்த இரண்டு பொடியையும் போட்டு வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையும், அன்பும், பாசமும், அன்னியோன்யமும் அதிகரிக்கும். அவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் முற்றிலும் நீங்கும். குழந்தைகளின் பிடிவாத குணம் படிப்படியாக விலகி தாய் தந்தையின் மீது பாசம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேரும் யோகத்தை தரும் வளர்பிறை பிரதோஷம்

பலவிதமான ஆன்மீக குணங்கள் நிறைந்த இந்த இரண்டு பொருட்களையும் படுக்கையறையில் இப்படி வைப்பதன் மூலம் கண்டிப்பான முறையில் அவர்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான மனக்கசப்புகளும் விலகி மகிழ்ச்சிகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்