திருவோண நட்சத்திரம் என்பது பெருமாளுக்கு உரிய நட்சத்திரம் உத்திரட்டாதி நட்சத்திரம் என்பது மகாலட்சுமிக்குரிய நட்சத்திரம் இந்த இரண்டு நட்சத்திரங்களும் ஒன்று சேரக்கூடிய நேரத்தை தான் அபிஜித் நட்சத்திர நேரம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் நாம் மகாலட்சுமி தாயாரையும் பெருமாளையும் ஒருசேர வழிபாடு செய்யும் பொழுது நமக்கு செல்வ செழிப்பிற்கு எந்த வித குறையுமே வராது. அப்படிப்பட்ட இந்த நேரத்தை முறையாக நாம் பயன்படுத்தினோம் என்றால் நாம் வேண்டியது நமக்கு கிடைக்கும். அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அபிஜித் நட்சத்திர நாள் வழிபாடு
27 நட்சத்திரங்கள் இருந்தாலும் 28 வது நட்சத்திரமாக ஒரு நட்சத்திரம் இருக்கிறது, அந்த நட்சத்திரம் வரக்கூடிய நாளில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் வேண்டுதலாக இருந்தாலும் அவை நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நட்சத்திரம் தான் அபிஜித் நட்சத்திரம். இந்த அபிஜித் நட்சத்திரம் ஒரு சில நேரங்கள் மட்டுமே இருக்கும் என்பதால் இதற்கு கூடுதல் சிறப்பும் இருக்கிறது. நாம் இப்படித்தான் நடக்கும் என்று எதை அந்த நேரத்தில் நினைக்கிறோமோ அது அப்படியே நடக்குமாம். அவ்வளவு சிறப்பு வாய்ந்த அபிஜித் நட்சத்திர நாளில் பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்யும் ஒரு எளிமையான முறை.
அபிஜித் நட்சத்திர நாள் வழிபாட்டை ஜூலை மாதம் 12ஆம் தேதி காலை 8:02 மணியிலிருந்து 10:02 மணிக்குள் செய்துவிட வேண்டும். இந்த நேரத்தில் நம்முடைய இடது உள்ளங்கையில் சுக்கிர மேடு என்று கூறக்கூடிய கட்டை விரலுக்கு கீழ் இருக்கும் பகுதியில் பச்சை நிற பேனாவை பயன்படுத்தி ஒரு வட்டம் வரைந்து அதற்கு நடுவில் மகாலட்சுமி தாயாரின் பீஜ மந்திரம் என்று கூறக்கூடிய “ஸ்ரீம்” என்னும் மந்திரத்தை எழுத வேண்டும். பிறகு சொர்ண முத்திரையை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி சொர்ண முத்திரை வைக்கும் பொழுது டைமண்ட் கற்கண்டு சிறிதளவு உள்ளங்கையிலும் வைத்து ஸ்வர்ண முத்திரை வைக்க வேண்டும்.
பிறகு பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாருக்குரிய மந்திரமான “ஓம் ஸ்ரீம் லலிதாம் லம்போதரம்” என்னும் மந்திரத்தை 111 முறை கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய அந்த கற்கண்டை வடக்கு திசை பார்த்தவாறு தூவி விட வேண்டும். பிறகு நீங்கள் எது நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது நடந்து விட்டது என்று கூறி பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். இந்த முறையில் அபிஜித் நட்சத்திர நாளில் நாம் வழிபாடு செய்யும்பொழுது பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருளால் எது நடந்தது என்று வழிபாடு செய்தோமோ அது விரைவில் நடந்து விடும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் அபிஜித் நட்சத்திர திருநாமம்
அதிசக்தி வாய்ந்த நட்சத்திரமாக கருதக்கூடிய இந்த அபிஜித் நட்சத்திர நாளில் பெரும்பாளையும் மகாலட்சுமி தாயாரையும் இப்படி எளிமையான முறையில் வழிபாடு செய்ய நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.