சனி கிரகம், நேர்கோட்டில் முன் நோக்கியவாறு நகர்ந்தால் அது சாதாரண சனி பெயர்ச்சி. அதுவே அந்த சனி கிரகமானது பின்னோக்கி தன்னுடைய பயணத்தை செய்தால், அது சனி வக்ர பெயிர்ச்சி என்று சொல்லுவார்கள். அந்த வகையில் பார்த்தால் இன்றைய தினம் 13-7-2025 ஞாயிற்றுக்கிழமை சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இன்று தொடங்கி இன்னும் 138 நாட்களுக்கு சனி பகவான் பின்னோக்கி தனது பயணத்தை தொடரப் போகிறார்.
இப்படி சனி பகவான் வக்கிரப் பெயர்ச்சி ஆகும்போது, 12 ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் எந்த ராசிக்காரர்கள் ஆக இருந்தாலும் சரி, இந்த சனி வக்ர பெயர்ச்சியின் மூலம் உங்களுடைய ராசிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், சூழ்நிலை இருந்தால், அந்த பிரச்சனையில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ள, நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இன்று தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள். அடுத்து 5 மாதங்களுக்கு உங்களுக்கு சனி பகவானால் எந்த பாதிப்பும் இருக்காது. உங்களை சனி பகவான் பாதிப்பில் இருந்து காப்பாற்ற போகும் அந்த மந்திரம் என்ன. அந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
சனி வக்ர பெயர்ச்சி மந்திரம்
சனிபகவானின் குரு, பைரவர். பைரவரை வணங்க, சனி பகவானால் எந்த தொந்தரவும் ஏற்படாது. இந்த சனி வக்ர பெயிர்சி காலகட்டத்தில் எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் சிவன் கோவிலில் இருக்கும் பைரவரை வழிபாடு செய்ய, சனிபகவான் உங்களுக்கு பல நன்மைகளை செய்து கொண்டே வருவார். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை, வியாபாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவும் இந்த வழிபாடு உங்களுக்கு வழிவகுக்கும்.
அந்த வகையில் இன்று துவங்கி, நீங்கள் அடுத்த 5 நாட்களுக்கு சொல்ல வேண்டிய கால பைரவர் மந்திரம் இதுதான். அடுத்த ஐந்து நாட்கள் கட்டாயம் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும் அதற்கு பின்பு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது.
பைரவர் மந்திரம்
ஓம் கால காலாய வித்மஹே
காலஹஸ்தாய தீமஹி தன்னோ
கால பைரவ ப்ரச்சோதயாத்
இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு சனி பகவானை மனதில் நினைத்துக் கொண்டு, கால பைரவரை வணங்கி செய்த பாவத்திற்கு சின்னதாக ஒரு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, இனி காலத்தாலும், கிரகத்தாலும் வரும் கஷ்டம் எனக்கு பாதிப்பை கொடுக்கக் கூடாது, என்று பிரார்த்தனை வைத்து இந்த மந்திரத்தை 3 முறை சொல்லி உறங்க செல்லுங்கள். நாளை முதல் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, இந்த மந்திரத்தை சொல்லிக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: எதிரிகளை விலகச் செய்யும் ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்
காலபைரவர் சன்னிதானத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம். சிவன் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம். எப்படி சொன்னாலும் சரி, நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை சொல்லும் பட்சத்தில் உங்களுக்கு சனிபகவானால் எப்போதும் எந்த தொந்தரவும் வராது என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.