ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் தங்களுடைய முகம் அழகாக இருக்க வேண்டும், பளிச்சென்று இருக்க வேண்டும், பொலிவாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அதிலும் குறிப்பாக இன்றைய காலத்தில் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இந்த ஒரு எதிர்பார்ப்பை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்காக பலரும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதை தவிர்த்து விட்டு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து நாம் ஃபேஸ் பேக் போடுவதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி முகம் பொலிவாக இருக்கும். அதைப்பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
இன்றைய தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு பலருக்கும் முகக் கருமை என்பது ஏற்பட்டு இருக்கிறது. அவர்களின் உண்மையான நிறம் மாறி கருமையான தோற்றம் ஏற்பட்டு இருக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் உபயோகப்படுத்தும் அழகு சாதன பொருட்களால் முகத்தில் மங்கு உண்டாகி இருக்கும். இதே போல் பருவ வயதில் இருக்கக்கூடிய பலருக்கும் கரும்புள்ளி பிரச்சனை என்பது வந்திருக்கும். இவை அனைத்தையும் நீக்குவதற்கு நாம் ஒரே ஒரு பேஸ் பேக்கை போட்டால் போதும். முகக்கருமையும், கரும்புள்ளியும், மங்கும் நீங்கி பொலிவான முகத்தை பெற முடியும்.
இதற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள்தான் தேவைப்படும். ஒன்று அரிசி மாவு மற்றொன்று ஆளி விதை/ இந்த ஆளி விதையை நாம் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு ஒரு ஸ்பூன் ஆளிவிதை மாவையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இது கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி அதை நன்றாக ஆறவைத்து முகம், கழுத்து, கைகள் என்று அனைத்து இடங்களிலும் இதை தடவ வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து இதை கழுவி விடலாம்.
இப்படி வாரத்திற்கு நான்கு முறை செய்பவர்களுக்கு முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கும். சரும பாதிப்புகள் படிப்படியாக குறையும். முகம் பொலிவாக இருப்பதோடு நிறத்தையும் இது மேம்படுத்தும். ஆளி விதையும் அரிசிமாவும் நம்முடைய சருமத்திற்கு பலவிதமான நன்மைகளை தரக்கூடியதாகவும் நம்முடைய நிறத்தை மேம்படுத்தக்கூடியதாகவும் திகழ்கிறது. இதில் எந்தவித கெமிக்கலையும் நாம் கலப்பது கிடையாது. இவை இரண்டுமே இயற்கையான பொருட்கள் என்பதால் எந்தவித பக்க விளைவுகளும் நமக்கு ஏற்படாது. சளி பிடிக்கும் தொல்லையும் இருக்காது என்பதால் யார் வேண்டுமானாலும் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: இயற்கை ஷாம்பு தயாரித்தல்
எளிதில் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களையும் ஒருசேர பயன்படுத்தி முகத்திலும் சருமத்திலும் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீக்கி ஆரோக்கியமான பொலிவான முக சருமத்தை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.