தற்போது ஆடி மாதம் நடந்து கொண்டிருக்கிறது. எல்லா அம்மன் கோவில்களிலும் கோலாகலமாக திருவிழா நடைபெறும். விசேஷமான அபிஷேகங்கள், பூஜைகள், மிக விமர்சையாக நடைபெறும். இந்த ஆடி மாதம் அம்மன் வழிபாட்டில் வாராஹியை நாம் மறந்துவிடலாமா. உங்கள் வீட்டு பக்கத்தில் வாராஹி சன்னிதானம் உள்ள கோவில் இருந்தாலும் சரி, வாராஹிக் கென்றே தனி கோவில் இருந்தாலும் சரி, அந்த கோவிலுக்கு சென்று, வராஹி அன்னைக்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுத்து, உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடைய பெயரையும் சொல்லி அர்ச்சனை செய்து, வாராகி முன்பு அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம்.
எடுத்த காரியத்தில் எல்லாம் தடை. வாழ்க்கையில் முன்னேற வழியே கிடைக்கவில்லை. வாழ்க்கையில் முன்னேற்றம் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை. எந்த காரியத்தை முயற்சி செய்தாலும் அதில் தோல்வி என்று வருத்தப்பட்டு கொண்டு இருப்பவர்கள், கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்பவர்கள், பெரிய அளவில் பூஜை செய்து விளக்கு போட்டு, வழிபாட்டை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு கஷ்டம் வந்ததா, காரிய தடை வந்ததா உங்க வீட்டு பூஜை அறையில் இருக்கும் அம்பாள் முன்பு அமர்ந்து கூட இந்த மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள். வந்த கஷ்டம் வந்த வழியே திரும்பி செல்லும்.
தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு கூட இந்த மந்திரத்தை சொல்லுங்கள். தினம் தினம் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கலாம். தினம் தினம் கஷ்டமில்லாமல் வாழலாம். ஆக மொத்தம் இந்த மந்திரத்தை சொல்ல உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. வாராகியின் ஆசிர்வாதத்தை பெற்று தர போகும் அந்த காரிய சித்தி மந்திரம் என்ன.
வாராஹி காரிய சித்தி மந்திரம்
ஓம் ஐம் க்லௌம் அதிசய கார்ய ஸித்தி தாயை நமஹ
இது ஒரு அதிசக்தி வாய்ந்த காரிய சித்தி மந்திரம். எடுத்த காரியத்தில் வெற்றியை காணக்கூடிய பாக்கியத்தையும் வாராகிதாய் உங்களுக்கு கொடுப்பாள். வாராஹிதாயின் பீஜ மந்திரமும் இதற்குள் அடக்கம். இந்த மந்திரத்தை, வாராகி முன்பு உச்சரிக்கும் போது மிகவும் நல்ல பலன்களை பெறுவீர்கள். வாராகி கோவில் உங்கள் வீட்டில் அருகில் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம்.
கோவிலுக்கே செல்ல முடியவில்லை என்றாலும் கவலை கிடையாது. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல வாராகியின் அருள் உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். காலையில் வேலைக்கு வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்பாக 5 முறை இந்த மந்திரத்தை சொல்லுங்கள். வீட்டு வேலை துவங்குவதற்கு முன்பு இந்த மந்திரத்தை 5 முறை சொல்லிவிட்டு வேலையை துவங்குங்கள். வேலையில் எந்த பின்னடைவும் வராது. தடையும் வராது.
இதையும் படிக்கலாமே: வேண்டுதலை நிறைவேற்றும் தீபங்கள்
உடல் சோர்வு வந்து வேலை கெட்டுப் போகாது. கண் திருஷ்டி உங்கள் மேல் விழாது. இப்படி பலவிதமான எதிர்மறை சக்திகளையும் தடுத்து நிறுத்தி, காரியசித்தியை கொடுக்கக்கூடிய சக்தி வாய்ந்த வாராஹி அம்மன் மந்திரம் இது. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இந்த மந்திரத்தை படித்து பலன் பெறலாம்.