- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅடமானத்தில் இருக்கும் நகையை திருப்ப பைரவர் வழிபாடு

அடமானத்தில் இருக்கும் நகையை திருப்ப பைரவர் வழிபாடு

- Advertisement -

பெண்களில் பலர் தங்க நகைகளை சேர்ப்பதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது அது ஒரு சேமிப்பாக இருக்கும், அவசர காலத்தில் கை கொடுக்கும் என்ற ஒரு எண்ணத்தினால் தான். அதனால் தான் பலரும் சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்து நகையை வாங்குகிறார்கள். அந்த நகையை ஆசையாக போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் நினைப்பார்கள். இருப்பினும் அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக வாங்கிய தங்க நகை அடமானத்திற்கு சென்று விடும் சூழ்நிலை ஏற்படும். அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கும் அடமானத்தில் இருக்கக்கூடிய நகையை திருப்புவதற்கும் கால பைரவரை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நகையை திருப்ப பைரவர் வழிபாடு

கால பைரவர் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்த வழிபாடு. நம்முடைய கர்ம வினைகளை பொறுத்து பலாபலன்களை தரக்கூடிய சனீஸ்வர பகவானின் குருவாக காலபைரவர் திகழ்கிறார். மேலும் காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதனால் நமக்கு இருக்கக்கூடிய சுவர்ண தோஷம் நீங்குவதற்கு கால பைரவரை நாம் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை பௌர்ணமி நாளில் செய்ய வேண்டும். பௌர்ணமி நாளில் அருகில் இருக்கக்கூடிய பைரவர் சன்னதிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது கால பைரவருக்கு சிவப்பு நிற மலர்களால் ஆன மாலையை வாங்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் அர்ச்சனை செய்வதற்கு வெற்றிலை பாக்கு தேங்காய், பழம் போன்றவற்றையும் வாங்கிக் கொள்ள வேண்டும். நேராக பைரவர் சன்னதிக்கு சென்று மலர்களை கொடுத்துவிட்டு தங்களின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அர்ச்சனை செய்து முடித்த பிறகு உடைத்த தேங்காயை திரும்ப தருவார்கள் அல்லவா? அந்த தேங்காயில் நல்லெண்ணெய் அல்லது நெய் அல்லது வேப்ப எண்ணெய் இவை மூன்றில் ஏதாவது ஒரு எண்ணையை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு பைரவருக்கு முன்பாக தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றி முடித்த பிறகு பைரவரிடம் அடமானத்தில் இருக்கக்கூடிய தங்க நகைகள் அனைத்தும் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக மூன்று பவுர்ணமி தினங்களில் கால பைரவருக்கு இந்த முறையில் தேங்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய அந்த மூன்று பௌர்ணமிக்குள் தங்க நகைகள் வீடு திரும்புவதை கண்கூடாக பார்க்க முடியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும் ஆடி அமாவாசை

சக்தி வாய்ந்த தெய்வங்களுள் ஒருவராக திகழக்கூடிய கால பைரவரை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவரின் அருளால் சுவர்ண தோஷம் முற்றிலும் நீங்குவதோடு அடமானத்தில் இருக்கக்கூடிய தங்க நகைகளும் வீடு திரும்பும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்