- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடி உதிர்வுக்கு இயற்கை ஷாம்பு

முடி உதிர்வுக்கு இயற்கை ஷாம்பு

- Advertisement -

தலைமுடி உதிர்வது பெரும் பிரச்சனையாக தொடர்ந்து வருகிறது. ஆண், பெண் பாகுபாடு இன்றி எல்லோருக்குமே முடி உதிர்வது வேகமாக நடைபெறுகிறது. ஸ்கேல்ப் பகுதி தெரியும் அளவிற்கு முடி உதிர்ந்து தொந்தரவு கொடுத்தால், நீங்கள் வேறு எதையுமே செய்ய வேண்டாம், இந்த ஒரு இயற்கையான ஷாம்புவை மட்டும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் போதும், முடி கடகடவென்று அடர்த்தியாக நிச்சயமாக வளரும். வாங்க அதை எப்படி தயாரிப்பது? என்று இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்வோம்.

தலைமுடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஊட்டச்சத்து இல்லாதது தான் மிகப்பெரிய காரணமாக அமைந்துவிடுகிறது. நல்ல ஊட்டச்சத்து கொடுத்து தலைமுடியை அழுக்குகள் சேராமல் இயற்கையாகவே பராமரிக்கக்கூடிய இந்த ஷாம்பூ தயாரிப்பதற்கு மூன்று பொருள் போதுமானது. வீட்டில் இருக்கும் சாதாரண இந்த பொருட்களுக்கு நம்முடைய மிக பெரிய பிரச்சனையை விரட்டக்கூடிய சக்தி இருக்கிறதா? என்பது இவ்வளவு நாள் தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டோம் என்று எண்ணுவீர்கள்.

- Advertisement -

இயற்கை ஷாம்பு தயாரிக்க தேவையான பொருட்கள் :
பூந்திக்கொட்டை
வெந்தயம்
அரிசி

இயற்கை ஷாம்பு தயாரித்து பயன்படுத்தும் முறை:
ஒரு பவுலில் 2 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் 2 டீஸ்பூன் நீங்கள் சாதம் செய்ய பயன்படுத்தும் அரிசி ஆகியவற்றை சேர்த்து நன்கு அலசி சுத்தமான தண்ணீர் ஒரு டம்ளர் அளவிற்கு ஊற்றி ஊற வையுங்கள். இதனுடன் 6 பூந்தி கொட்டைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். நன்கு ஆறியதும் அப்படியே ஊற விட்டு விட வேண்டும். இரவில் தயார் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து பின் காலையில் எடுத்து மிக்ஸர் ஜாரில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் விட்டால் நன்கு நுரைத்து அரைபடும். நுரையுடன் கூடிய அந்த தண்ணீரை மட்டும் தனியாக பிரித்து எடுங்கள். மீதம் இருக்கும் சக்கையை அரைத்து தலைக்கு பேக் போட்டுக் கொள்ளலாம். இந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். மூன்று மாதம் வரை கெட்டுப் போகாது. நீங்கள் ஒவ்வொரு முறை தலைக்கு இந்த இயற்கையான ஷாம்புவை பயன்படுத்தி அலசுங்கள்.

- Advertisement -

பூந்திக்கொட்டையில் இருக்கும் சபோனின்கள் இயற்கை நுரைப்பான். இது முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. நுனி வெடிப்பைக் குறைத்து, முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும். வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே இவை அனைத்தும் முடி ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானவை. வைட்டமின் ஈ குறிப்பாக முடி வளர்ச்சிக்கும், உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. முடி வளர்ச்சிக்கு தேவையான இரும்புச்சத்து இதில் உள்ளது. இரும்புச்சத்து குறைபாடு முடி உதிர்வுக்கு ஒரு முக்கிய காரணம்.

வெந்தயத்தில் உள்ள கெரட்டின் என்னும் புரதம் முடி இழைகளை வலுப்படுத்தி, முடி உதிர்வதைக் குறைத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நிகோடினிக் அமிலம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. லெசித்தின் முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தி, முடியை வலுப்படுத்த உதவுகிறது.அமினோ அமிலங்கள், முடி ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அடிப்படையானவை. இரும்புச்சத்தும் உள்ளது. பொட்டாசியம், முடி வேர்களை வலுப்படுத்த உதவுகிறது.

இதையும் படிக்கலாமே:
சுக்கிர தோஷத்தை நீக்கி சுகமான வாழ்க்கை வாழ

இனோசிட்டால் என்பது அரிசி நீரில் உள்ள ஒரு கார்போஹைட்ரேட் ஆகும். இது சேதமடைந்த முடியை சரிசெய்து, முடியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் பி மற்றும் ஈ முடி ஆரோக்கியத்திற்கும், பளபளப்பிற்கும் முக்கியமானவை. வைட்டமின் ஈ உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. அரிசியில் மெக்னீசியம், துத்தநாகம் போன்ற சில தாதுக்களும் உள்ளன, அவை முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த மூன்று பொருட்களின் கூட்டுச் சத்துக்கள் உங்கள் கூந்தலுக்கு ஊட்டமளித்து, முடி வளர்ச்சியை ஊக்குவித்து, ஆரோக்கியமான நல்ல அடர்த்தியான கூந்தலைப் பெற உதவும்.

சற்று முன்