காலங்களுக்கு அதிபதியாகவும் எட்டுத்திக்குகளுக்கும் உரியவராகவும் திகழ்பவர் தான் கால பைரவர். கால பைரவரை யார் ஒருவர் முழு மனதோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு எந்தவித கஷ்டமும் ஏற்படாமல் காலபைர பைரவர் காப்பாற்றுவார் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு யார் எல்லாம் கஷ்டத்தை தருகிறார்களோ அவர்களை அவர் விலக்கி வைப்பார் என்றும் கூட கூறலாம். கடனாக இருந்தாலும் சரி, எதிரிகளாக இருந்தாலும் சரி, துரோகிகளாக இருந்தாலும் சரி அவர்கள் யாரும் திரும்பவும் வாழ்க்கைக்குள் வராத அளவிற்கு பாதுகாவலராக கால பைரவர் திகழ்வார். அப்படிப்பட்ட கால பைரவருக்குரிய வளர்பிறை அஷ்டமி நாளில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வளர்பிறை அஷ்டமி வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்பதற்காக தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அதே சமயம் செல்வ செழிப்பில் உயர வேண்டும், பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வளர்பிறை அஷ்டமியில் காலபைரவரை வழிபாடு செய்ய வேண்டும். வளர்பிறை அஷ்டமி நாள் அன்றுதான் அஷ்டலட்சுமிகளும் காலபைரவரை வழிபாடு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் வளர்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது கால பைரவரின் அருளோடு அஷ்ட லட்சுமிகளின் அருளையும் பெற முடியும்.
அந்த வகையில் இந்த முறை வெள்ளிக்கிழமையோடு வளர்பிறை அஷ்டமி சேர்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்குரிய கிழமை. வளர்பிறை அஷ்டமி பைரவற்குரிய திதி. இந்த இரண்டும் சேர்ந்து வரக்கூடிய அற்புதமான நாளில் காலை 10 மணியிலிருந்து 1 மணிக்குள் காலபைரவரை நாம் வழிபாடு செய்து விட்டோம் என்றால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் நம் வாழ்வில் வந்து சேரும். இந்த வழிபாட்டை வீட்டிலும் செய்யலாம் அருகில் எந்த ஆலயத்தில் காலபைரவர் இருக்கிறாரோ அங்கு சென்றோம் செய்யலாம்.
இதற்கு நமக்கு ஒரு தேங்காய் வேண்டும். இந்த தேங்காயை சரிசமமாக உடைத்து அதில் சுத்தமான நெய்யை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபமேற்றி சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை 27 முறை கூறவேண்டும். பிறகு கால பைரவரின் மூல மந்திரத்தை 27 முறை கூறவேண்டும். சொர்ண ஆகர்ஷண பைரவரின் அஷ்டகம் இருக்கும் அந்த அஷ்டகத்தை பாராயணம் செய்ய வேண்டும். பிறகு “ஓம் பம் பைரவாய நம” என்னும் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.
இந்த வழிபாட்டை செய்யும் பொழுது ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்து செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஆலயத்தில் செய்பவர்கள் டைமண்ட் கற்கண்டையாவது நெய்வேத்தியமாக வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். இவ்வாறு வழிபாட்டை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு நெய்வேத்தியமாக வைத்த இனிப்பை நாமும் உண்டு அருகில் இருப்பவர்களுக்கும் பிரசாதமாக தர வேண்டும்.
இதையும் படிக்கலாமே: ஆடி மூன்றாம் வெள்ளி வழிபாடு
வளர்பிறை அஷ்டமியில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை யார் ஒருவர் முழு மனதோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு சொர்ண ஆகர்ஷண பைரவரின் அருளாலும் அஷ்டலட்சுமிகளின் அருளாலும் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.