- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி மூன்றாம் வெள்ளி வழிபாடு

ஆடி மூன்றாம் வெள்ளி வழிபாடு

- Advertisement -

வெள்ளிக்கிழமை என்றாலே அது மகாலட்சுமிக்குரிய கிழமை என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அனைத்து பெண் தெய்வங்களுக்கும் உகந்த கிழமையாக திகழ்கிறது. அன்றைய தினம் வளர்பிறையாக இருப்பதால் இது கூடுதல் சிறப்பை தருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினம் சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. சுவாதி நட்சத்திரம் என்பது லட்சுமி நரசிம்மருக்கு உகந்த நட்சத்திரம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நட்சத்திரமும் சிறப்பு மிகுந்த கிழமையும் சேர்ந்து வரக்கூடிய அற்புதமான நாளில் மகாலட்சுமி தாயாரை எந்த முறையில் வழிபாடு செய்தால் கடன் தீர்ந்து செல்வ செழிப்புடன் வாழலாம் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடி மூன்றாம் வெள்ளி வழிபாடு

பெண் தெய்வ வழிபாட்டிற்கு உரிய கிழமையாக திகழ்வது வெள்ளிக்கிழமை. அதனால் தான் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பான வழிபாடுகளை செய்வார்கள். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு மிகுந்த வெள்ளிக்கிழமையாகவும் அன்றைய தினத்தில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளும் அலங்காரங்களும் செய்யப்படும். பலரும் அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்யும் வழக்கத்தையும் வைத்திருப்பார்கள். அந்த வகையில் மிகவும் எளிமையாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு வழிப்பாட்டு முறையை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

ஆகஸ்ட் 1ஆம் தேதி வளர்பிறை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல் உப்பை வாங்கி வந்து வீட்டில் வைக்க மகாலட்சுமியே வீட்டிற்குள் வருவதாக அர்த்தம். அதனால் மறவாமல் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய கடைக்கு சென்று வீட்டில் இருக்கும் பெண்கள் தங்கள் கைப்பட பணத்தை கொடுத்து கல் உப்பை வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். கொண்டு வந்த கல்லுப்பை வீட்டு பூஜை அறையில் வைத்து காலையில் எப்பொழுதும் போல் வழிபாடுகளை செய்து கொள்ளுங்கள்.

மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் ஒரு தட்டில் வாங்கி வந்த கல்லுப்பை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு மகாலட்சுமிக்கு முன்பாக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு மகாலட்சுமி அஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்றவற்றை பாராயணம் செய்ய வேண்டும். இவற்றை பாராயணம் செய்து முடித்த பிறகு ஐஸ்வர்ய மகாலட்சுமியின் பின்வரும் மந்திரத்தை 27 முறை கூறி மல்லிகை பூவினால் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த கல்லுப்பு தீபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து குளிர் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காலையில் கல் உப்பை எடுத்து நாம் எப்பொழுதும் போல் நம்முடைய சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வளர்பிறை வெள்ளிக்கிழமையும் சுவாதி நட்சத்திரமும் சேர்ந்திருக்கக்கூடிய நாளில் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய அவளின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று கடன் பிரச்சனை இல்லாமல் செல்வ செழிப்புடன் வாழ முடியும்.

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் க்லீம் ஐஸ்வர்ய மகாலட்சுமியே நமோ நம”

இதையும் படிக்கலாமே: வளர்பிறை வெள்ளிக்கிழமை தீபம்

மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய நாளான வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி நரசிம்மருக்குரிய சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் மகாலட்சுமி தாயாரை மறவாமல் நாம் வழிபாடு செய்ய கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்குவதோடு செல்வ செழிப்புடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்