நம்மில் எல்லோருக்குமே திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று அந்த முருகப்பெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் ஏனோ தெரியவில்லை. சில பேருக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடைக்கிறது. கையில் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், அந்த திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லக்கூடிய பாக்கியம் பல பேருக்கு கிடைப்பது இல்லை.
நேரமும் காலமும் கைக்கூடி வந்தால் மட்டுமே, அந்த திருச்செந்தூர் முருகப்பெருமான் நினைத்தால் மட்டுமே, அவனைச் சென்று தரிசனம் செய்வதற்கு உண்டான பாக்கியம் நமக்கு கிடைக்கும். அந்த நேரம் காலத்தை நம்மால் உருவாக்க முடியுமா? நிச்சயம் முடியும். அந்த திருச்செந்தூர் முருகனின் அருள் ஆசியோடு பின் செல்லக்கூடிய இந்த விஷயத்தை 6 வாரம் செவ்வாய்க்கிழமை பின்பற்றி பாருங்கள். அடுத்த 6 வாரத்திற்குள் நீங்களும் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யக்கூடிய பாக்கியத்தை பெறுப்பீர்கள்.
முருகனை நினைத்து 6 செவ்வாய்க்கிழமைகளில் இந்த வழிபாட்டை வீட்டில் இருந்தபடியே செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் முருகனின் திரு உருவ படத்தை துடைத்து சந்தன குங்குமப்பொட்டு வைத்து அவனுக்கு செவ்வரளி பூக்களை வாங்கி போட்டு ஒரே ஒரு நெய் தீபம் ஏற்றி ஒரு மஞ்சள் துணியில் 101 ரூபாய் காணிக்கை வைத்து முடிந்து, திருச்செந்தூர் முருகா சீக்கிரமே நான் உன்னை தரிசனம் செய்ய உன் திருத்தலத்திற்கு வர வேண்டும்.
இந்த 6 வாரம் முடிவதற்குள் இந்த காணிக்கையை உன்னுடைய கோவிலில் கொண்டு வந்து செலுத்தக்கூடிய பாக்கியத்தை எனக்கு கொடு என்று மனதார பிரார்த்தனை செய்துவிட்டு, அந்த முடிச்சை பூஜை அறையில் முருகனின் திருவுருவ படத்தின் பாதத்தில் வைத்து விட்டு, உங்களால் முடிந்த நெய்வேத்தியம் வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
முதல் வாரம் இந்த வழிபாட்டை செய்தது போலவே, அடுத்து வரக்கூடிய 6 வாரம் செவ்வாய்க்கிழமையும் நீங்கள் முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அந்த 101 ரூபாய் முடிச்சு மட்டும் பூஜை அறையில் இருந்தால் போதும். வாரம் வாரம் 101 ரூபாய் முடிந்து வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
முடிந்தால் இந்த வழிபாட்டை வீட்டில் செய்து முடித்துவிட்டு, வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு அந்த முருகப்பெருமான் சன்னிதானத்தில் அமர்ந்து “ஓம் சரவணபவ” மந்திரத்தை சொல்லி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சீக்கிரம் என்னை அழைத்துச் செல் முருகா, என்று பிரார்த்தனை வைப்பதும் சிறப்பான பலனைத் தரும்.
மறக்காமல் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும்போது அந்த காணிக்கையை அப்படியே மஞ்சள் முடிச்சோடு கொண்டு போய் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். 6 வாரம் செவ்வாய்க்கிழமை தவறாமல் இதை மட்டும் நீங்கள் செய்து பாருங்கள். ஆறாவது வாரம் செவ்வாய்க்கிழமை முடிவதற்குள்ளாகவே சில பேருக்கு திருச்செந்தூர் முருகனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.
வழிப்பாட்டில் நம்பிக்கை ரொம்ப ரொம்ப முக்கியம். யார் வேண்டும் என்றாலும் ரூபாயை எடுத்து திருச்செந்தூர் முருகன் பாதத்தில் வைக்கலாம். ஆனால் எந்த அளவுக்கு நீங்கள் நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கான வேண்டுதல் பலிக்கும்.
இதையும் படிக்கலாமே: மருதாணி செடி யோகம்
இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் நிச்சயம் நாம் திருச்செந்தூர் முருகனை தரிசிப்பேன் என்ற நம்பிக்கையை 100% வையுங்கள் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.