- Advertisement -

ஷோடசக் கலை நேர வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி, அமாவாசை என்ற இரண்டு திதிகள் வரும். இந்த திதிகள் வரக்கூடிய நாளில் பிரபஞ்ச பேராற்றல் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பிரபஞ்ச பேராற்றல் நிறைந்த இந்த திதிகள் நிறைவடையும் நேரத்திலோ அல்லது நிறைவடைந்த பிறகோ வரக்கூடிய ஒரு மிக முக்கியமான நேரமாக தான் ஷோடசக்கலை நேரம் திகழ்கிறது. இந்த நேரத்தை சரியாக பயன்படுத்துபவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல் முற்றிலும் நிறைவேறும் என்றும் இந்த நேரத்தை சரியாக கனித்து பயன்படுத்தியதால் தான் நம்முடைய சித்தர்களும் முனிவர்களும் அனைத்து விதமான சக்திகளையும் வரங்களையும் பெற்றார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஷோடசக் கலை நேர வழிபாடு

பௌர்ணமியோ அமாவாசையோ அது நிறைவடைய கூடிய நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவும் அது நிறைவடைந்த பிறகு வரக்கூடிய ஒரு மணி நேரத்திலும் ஆக மொத்தம் இரண்டு மணி நேரத்தில் ஏதாவது ஒரு ஐந்து நொடிகள் மட்டும்தான் இந்த ஷோடச கலை நேரம் என்பது வரும். அந்த ஐந்து நொடிகளை யாராலும் சரியாக கணிக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதனால் நாம் இந்த இரண்டு மணி நேரமும் நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றோ அல்லது வேண்டுதல் நிறைவேறி விட்டது என்றோ வழிபாடு செய்தோம் என்றால் ஷோடசக் கலை நேரத்தில் நாம் செய்த அந்த வழிபாட்டின் பலனால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். இதோடு ஒரு சூட்சமமான மந்திர வழிபாடும் இருக்கிறது. அதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

அந்த வகையில் ஆடி மாத பௌர்ணமி என்பது ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி மதியம் 2:52 மணிக்கு ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி மதியம் 2:26 மணிக்கு நிறைவடைகிறது. நிறைவடைய கூடிய இந்த நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அதாவது மதியம் 1:26 நிமிடத்தில் இருந்து பௌர்ணமி திதி நிறைவடைந்த பிறகு வரக்கூடிய ஒரு மணி நேரம் அதாவது 3 மணி 26 நிமிடம் வரை இருக்கக்கூடிய இந்த இரண்டு மணி நேரத்தில் ஏதோ ஒரு 5 நொடிகள் தான் சோடசக்கலை நேரம் என்பது வரப்போகிறது. அதனால் இந்த இரண்டு மணி நேரத்தையும் நாம் முழுமையாக பயன்படுத்தினால் கண்டிப்பான முறையில் சோடசக்கலை நேரத்தில் நாம் வேண்டிய வரத்தை நம்மால் பெற முடியும்.

இந்த நேரத்தில் நம்முடைய வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்து அதில் நவதானியங்களை பரப்ப வேண்டும். நவதானிய செட் என்பது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அதை வாங்கி பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இந்த ஷோடசகலை வரக்கூடிய அந்த ஐந்து நொடிகளில் மும்மூர்த்திகளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதால் முதலில் மும்மூர்த்திகளை வழிபாடு செய்து விட்டு நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை முழு மனதோடு அந்த தீபச்சுடர் ஒளியை பார்த்தவாறு கூற வேண்டும்.

- Advertisement -

இந்த இரண்டு மணி நேரமும் நம்முடைய வேண்டுதலை கூறுவதாக இருந்தாலும் கூறலாம். அல்லது அவ்வாறு கூற இயலாது என்பவர்கள் பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை முழுமனதோடு அந்த தீபச்சுடருளியை பார்த்தவாறு இரண்டு மணி நேரமும் கூற வேண்டும். இரண்டு மணி நேரமும் தீபச்சுடர் ஒளியை பார்க்க முடியாது, வேலைகள் இருக்கிறது என்பவர்கள் எந்த வேலையை செய்து கொண்டிருந்தாலும் மனதிற்குள் இந்த மந்திரத்தை கூறிக் கொண்டே செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் நாம் வேண்டியது அனைத்தும் நமக்கு கிடைக்கும்.

மந்திரம்

“சர்வமும் வசி சகலமும் வசி சகலரும் வசி”

இதையும் படிக்கலாமே: மந்திர தோஷம் நீங்க ஆவணி அவிட்ட வழிபாடு

மிகவும் அபூர்வ சக்தி வாய்ந்த இந்த சோடசக்கலை நேரத்தை நம் முழுமையாக பயன்படுத்தி இந்த முறையில் வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் சோடச கலை நேரத்தால் நாம் வேண்டிய வேண்டுதல் நமக்கு நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்