- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஐஸ்வர்ய யோகத்தை தரும் ஆடி கடைசி வெள்ளி

ஐஸ்வர்ய யோகத்தை தரும் ஆடி கடைசி வெள்ளி

- Advertisement -

அனைத்து நாட்களிலும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பெண் தெய்வத்திற்கு உரிய சிறப்பு மிகுந்த மாதமாக திகழக்கூடிய ஆடி மாதத்தில் மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமை அன்று நாம் தீபம் ஏற்றினால் அந்த தீபத்திற்கு அதிக அளவில் பலன் உண்டாகும். சாதாரணமாக ஏற்றக்கூடிய தீபத்திற்கே அதிக அளவு பலன் உண்டாகும் எனில் மகாலட்சுமிக்குரிய பொருளை சேர்த்து நாம் தீபம் ஏற்றும் பொழுது அந்த தீபத்தின் பலனை நம்மால் அளவிடவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு தீபம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமையை நீக்கி ஐஸ்வர்யத்தை பெருக செய்யும். அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடி கடைசி வெள்ளி

பொதுவாகவே ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் வீட்டை சுத்தம் செய்து தீபம் ஏற்றி சாம்பிராணி தூபம் காட்டி வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ அருகில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு தாம்பாளம் கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதத்தை வாங்குவார்கள். ஆடி மாதத்தில் எந்த வெள்ளிக்கிழமையும் வழிபாடு செய்யவில்லை வழிபாடு செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பவர்கள் இந்த கடைசி வெள்ளிக்கிழமை தவறவிடாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

ஏழு மங்களகரமான பொருட்களை ஒன்றாக சேர்த்து ஒரு சுமங்கலி செட்டை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து அவர்களின் காலில் விழுந்த ஆசீர்வாதம் வாங்கி நாம் தயார் செய்து வைத்திருக்கும் அந்த சுமங்கலி செட்டை அவர்களுக்கு தர வேண்டும். ஒருவேளை வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களை அழைக்க இயலவில்லை என்பவர்கள் அம்மன ஆலயத்திற்கு சென்று அங்கு வரக்கூடிய சுமங்கலி பெண்களிடமும் இந்த சுமங்கலி செட்டை கொடுக்கலாம். இதோடு சேர்த்து அன்றைய தினம் பச்சரிசியையும் வெள்ளை மொச்சையையும் வறுமையில் வாடுபவர்களுக்கு தானமாக தருவதன் மூலம் சுக்கிரனின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இதோடு சேர்த்து இந்த ஒரு தீபத்தையும் நாம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் ஏற்றும் பொழுது நாம் வேண்டிய நியாயமான வேண்டுதல் அப்படியே நினைவேரும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய முக்கியமான ஒரு பொருள் சித்தரத்தை. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதில் மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு ஒரு சிறிய துண்டு சித்தரத்தையும் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றுவதன் மூலம் சித்தரத்தையின் வாசம் வீடு முழுவதும் பரவ ஆரம்பிக்கும்.

- Advertisement -

சித்தரத்தை என்பது மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருள் என்பதால் இந்த வாசத்திற்கு மகாலட்சுமி அடிமையாகி விடுவாள். இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு நியாயமான வேண்டுதலை மகாலட்சுமி தாயாரிடம் வைத்தாலும் அந்த வேண்டுதல் உடனே நிறைவேறும். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும். வீட்டில் எப்பொழுதும் ஏற்றக்கூடிய தீபத்தை தவிர்த்து விட்டு தனியாக இதற்கென்று ஒரு தீபத்தை ஏற்று ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வம் மற்றும் அம்மனின் அருளை பெற

மிகவும் சக்தி வாய்ந்த அற்புதமான இந்த நாளில் எளிமையான தீபத்தை ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு அஷ்ட லட்சுமிகளின் அருளால் வறுமை நிலை முற்றிலும் நீங்கி ஐஸ்வர்யத்துடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்