- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுபேர சம்பத்து பெற சிவ வழிபாடு

குபேர சம்பத்து பெற சிவ வழிபாடு

- Advertisement -

வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களைப் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாவிஷ்ணுவையும் அதே சமயம் குபேரரையும் வழிபாடு செய்ய வேண்டு.ம் குபேரரை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது இருப்பினும் குபேரருக்கு இந்த நவநிதிகளும் கிடைப்பதற்கு காரணமாக திகழ்ந்தவர் சிவபெருமான். சிவபெருமானை நினைத்து தவம் இருந்ததால் தான் குபேரருக்கு இந்த நவநிதிகளும் கிடைத்தது என்று புராணங்கள் கூறுகின்றன. அதனால் இவர்கள் இருவரை எப்படி வெளிப்பாடு செய்கிறோமோ அதே போல் நாம் சிவபெருமானின் வழிபாடு செய்யும்பொழுது செல்வ செழிப்புடன் வாழ முடியும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குபேர சம்பத்து பெற வழிபாடு

அழிக்கும் தொழிலை செய்யக்கூடியவர் சிவபெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு ஒரு சிலர் யோசிப்பார்கள். ஆனால் குபேரருக்கே நவநிதிகளை தந்தருளியவராக சிவபெருமான் திகழ்வதால் நாம் அவரை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியடையும் என்று கூறலாம். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த சிவபெருமானுக்குரிய தேய்பிறை அஷ்டமி நாளில் சிவபெருமானை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

பலரும் பிரதோஷ நாளன்று விரதம் இருந்து சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு பிறகு வழிபாட்டை நிறைவு செய்வார்கள், இன்னும் சிலரோ விரதம் இருக்க இயலாது என்பதால் சிவபெருமானின் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டை மட்டும் மேற்கொள்வார்கள். இன்னும் சிலரோ ஆலயத்திற்கெல்லாம் செல்ல இயலாது வீட்டிலேயே எனக்கு தெரிந்த அளவிற்கு நான் பூஜை செய்கிறேன் என்று பூஜை செய்யும் வழக்கம் வைத்திருப்பார்கள். எப்படி இருந்தாலும் பிரதோஷ நாளன்று சிவபெருமானை நினைத்து சிவபெருமானின் நாமத்தை கூறுவது என்பது பல மடங்கு பலன்களை தரும்.

பிரதோஷ நேரத்தில் வீட்டு பூஜை அறையில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து சிவ மந்திரத்தை கூற வேண்டும். ஆலயத்திற்கு செல்பவர்கள் அபிஷேக ஆராதனைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி தருவதோடு அந்த அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்யலாம். இப்படி வழிபாடு செய்து விட்டு வீட்டி: பூஜையில் சுத்தமான மஞ்சள் பன்னீரை ஊற்றி சிவலிங்கமாக பிடித்து வைக்க வேண்டும். இந்த சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளையும் வாசனை மிகுந்த மலர்களையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும்

- Advertisement -

பிறகு ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை சிவபெருமானுக்கு முன்பாக வைத்துவிட்டு நெய் தீபம் ஏற்றி வைத்து பின்வரும் இந்த மந்திரங்களை 108 முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும் இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் குபேர சம்பத்தி என்பது உண்டாகும்

மந்திரம்

” ஓம் சிவ சிவ ஓம்
ஓம் குபேர சிவ சிவ ஓம் “

- Advertisement -

மந்திரத்தை கூறி வழிபாடு செய்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக இந்த மஞ்சலை எடுத்து வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் தங்களுடைய நெற்றியில் வைத்துக்கொண்டு உறங்கச் செல்ல வேண்டும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் இந்த மஞ்சளை தங்களுடைய கல்லாப்பெட்டியில் வைப்பது என்பது மிகவும் சிறப்பு. வீட்டில் இருப்பவர்கள் தங்கள் பணம் வைக்கும் இடத்தில் இந்த மஞ்சளை எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: தேய்பிறை பிரதோஷ தீப வழிபாடு

இந்த பொருளில் சிவபெருமானை பிரித்து வைத்து சிவ பூஜை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு குபேரரின் அருளும் குரு பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையை நல்ல விதமாக மாறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்