- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆவணி அமாவாசை துர்க்கை அம்மன் வழிபாடு

ஆவணி அமாவாசை துர்க்கை அம்மன் வழிபாடு

- Advertisement -

நவகிரக தோஷத்தை நீக்கக்கூடிய தெய்வங்களில் துர்க்கை அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார். மேலும் துர்க்கை அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகளும், எதிர்மறை ஆற்றல்களும் நம்மை விட்டு விலகும் என்றே கூறப்படுகிறது. அதனால் தான் துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட துர்க்கை அம்மனை ஆவணி அமாவாசை நாளன்று எந்த முறையில் வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆவணி அமாவாசை வழிபாடு

உலகிற்கு தீமையை தந்த அசுரனை வதம் செய்வதற்காக பார்வதி அம்மன் எடுத்த அவதாரமே துர்க்கை அம்மன் அவதாரம். அப்படிப்பட்ட துர்க்கை அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கஷ்டங்களை தரக்கூடிய அனைத்துமே நீங்கிவிடும் என்று கூறலாம். பொதுவாக துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. இந்த முறை வெள்ளிக்கிழமையும் அமாவாசையும் சேர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாளில் நாம் துர்க்கை அம்மனை வழிபாடு செய்யும்பொழுது வேண்டியது நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நம்முடைய வீட்டு பூஜை அறையிலேயே நாம் செய்துவிடலாம். ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அமாவாசை இருக்கக்கூடிய நேரத்தில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். அதாவது ஆவணி அமாவாசை என்பது மதியம் 12:54 மணிக்கு தான் தொடங்குகிறது என்பதால் இந்த வழிபாட்டை ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி மாலை நேரத்தில் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு தாழம்பூ குங்குமம் மற்றும் புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம் பழம் ஒன்று வேண்டும். வீட்டில் எப்பொழுதும் போல் தீபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் படத்திற்கு 108 போற்றிகளை கூறி குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். துர்க்கை அம்மன் படம் இல்லை என்பவர்கள் பெண் தெய்வ படம் எது இருந்தாலும் அந்த படத்திற்கு இந்த அச்சினையை செய்யலாம்.

பிறகு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதில் சிவப்பு நிற ஸ்கெட்ச் அல்லது மார்கரை பயன்படுத்தி 786 என்ற எண்ணை எழுத வேண்டும். பிறகு அந்த எண் அழியாதவாறு எலுமிச்சம் பழத்தை வலது கையில் வைத்து மூடிக்கொண்டு தங்களுக்கு என்ன வேண்டுமோ எது நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை முழு மனதோடு துர்க்கை அம்மன் இடம் வேண்டுதலாக முன்வைக்க வேண்டும். இவ்வாறு வேண்டுதலை செய்த பிறகு கையில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை நம் குங்கும அர்ச்சனை செய்திருப்போம் அல்லவா? அந்த குங்குமத்திற்கு மேல் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். சனிக்கிழமை அன்று காலையில் குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி எப்பொழுதும் போல் வழிபாட்டை செய்துவிட்டு துர்க்கை அம்மனுக்கு முன்பாக வைத்திருந்த அந்த எலுமிச்சம் பழத்தையும் சிறிதளவு குங்குமத்தையும் சேர்த்து நம்முடைய பணம், நகை வைக்கும் பீரோவில் வைத்து விட வேண்டும். அடுத்த மாதம் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று இந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக எலுமிச்சம் பழத்தை வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நாம் எது வேண்டும் என்று அம்மனிடம் வழிபாடு செய்தோமோ அதில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் நம்மை வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: வாஸ்து குறைபாட்டை நீக்கும் கல் உப்பு பரிகாரம்

துர்க்கை அம்மன் வழிபாட்டிற்கு ராகு காலம் எந்த அளவிற்கு முக்கியமான ஒரு நேரமோ அதே போல் தான் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அமாவாசையும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. முழுமனதோடு துர்க்கை அம்மனை நினைத்து இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்