ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாக வேண்டும் என்று கடினமாக உழைத்தும் அந்த முயற்சிகளில் வெற்றிகளைப் பெற முடியவில்லை என்னும் பட்சத்தில் அவருக்கு காரிய தடைகள் இருக்கிறது என்று பொருள் படும். காரிய தடையை நீக்கக்கூடிய அற்புதமான தெய்வமாக விநாயகர் ஒருபுறம் திகழ்ந்தாலும் மற்றொரு தெய்வமாக ஆஞ்சநேயர் திகழ்கிறார். ஆஞ்சநேயரை அமாவாசை தினத்தன்று எந்த முறையில் வழிபட்டால் வாழ்க்கை வெற்றிப்பாதைக்கு செல்லும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அமாவாசை வழிபாடு
ஆபத்து நேரத்தில் நாம் கூப்பிட்டவுடன் நம்முடைய கஷ்டத்தை தீர்க்க ஓடோடி வரக்கூடிய தெய்வங்களில் ஒருவராக திகழ்பவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாக சனிக்கிழமை திகழ்கிறது. உகந்த நட்சத்திரமாக மூல நட்சத்திரமும், உகந்த திதியாக அமாவாசை திதியும் திகழ்கிறது. அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயர் வழிபாடு என்பது நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான நல்ல மாற்றங்களை உண்டாக்கும். இந்த முறை அமாவாசை என்பது சனிக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. அதனால் ஆஞ்சநேயர் வழிபாட்டிற்கு இன்றைய தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாக கருதப்படுகிறது.
ஆவணி அமாவாசை என்பது வெள்ளிக்கிழமையே தொடங்கினாலும் சனிக்கிழமை மதியம் 12:59 வரை இருக்கிறது என்பதால் சனிக்கிழமையும் பலரும் அமாவாசை வழிபாட்டை மேற்கொள்வார்கள். அதனால் நாமும் அமாவாசை திதியோடு சேர்ந்து வரக்கூடிய சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை பட்ட அவமானங்களும் தோல்விகளும் வெற்றிகளாக மாறும்.
அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு அமாவாசை திதி நிறைவடைவதற்குள் செல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இருக்கக்கூடிய சனி ஹோரையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும்பொழுது சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் விலகும். அவ்வாறு ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு செல்லும் பொழுது ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது வடைமாலை இவை இரண்டில் எது தங்களால் இயலுமோ அதை சாற்ற வேண்டும்.
வெற்றிலை மாலை சான்றுபவர்கள் தங்களுடைய வயதின் அடிப்படையில் வெற்றிலைகளை மாலையாக தொடுத்து சாற்ற வேண்டும். உதாரணமாக 35 வயது என்றால் 35 வெற்றிலைகளை மாலையாக கட்டி சாற்ற வேண்டும். பிறகு ஆஞ்சநேயருக்கு இரண்டு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து இதுவரை தங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும். இனிமேல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு 11 முறை ஆஞ்சநேயரை வலம் வரவேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது ஆஞ்சநேயருக்கு தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக வைத்து படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தருவதன் மூலம் கூடுதல் பலனை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: ஆவணி அமாவாசையில் குலதெய்வ வழிபாடு
ஆஞ்சநேயரை அமாவாசை தினத்தில் இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான வெற்றிகளும் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.