நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இஷ்ட தெய்வத்தை எந்த அளவிற்கு விருப்பப்பட்டு வழிபாடு செய்கிறோமோ அதே போல் நம்முடைய குலதெய்வத்தையும் அனுதினமும் வழிபாடு செய்ய வேண்டும். குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான் நாம் வணங்கக்கூடிய மற்ற பிற தெய்வங்களின் அருளை நம்மால் பெற முடியும். எப்படி அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாடு என்பது முக்கியமோ அதேபோல் குலதெய்வ வழிபாடும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபாடு செய்வதோடு குலதெய்வ வழிபாட்டையும் நாம் மேற்கொள்ளும் பொழுது குலதெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். மேலும் குலதெய்வம் நம்முடைய வீட்டிற்கு எழுந்தருளி நம் வீட்டில் இருக்கக் கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களையும் நீக்கி சிறப்பான ஒரு வாழ்க்கையை வாழ அருள் புரிவார்கள். அப்படிப்பட்ட குலதெய்வ வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.
ஆவணி அமாவாசை வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அவருக்கு கண்டிப்பான முறையில் குலதெய்வத்தின் அருள் என்பது வேண்டும். ஆண் தெய்வமாக இருந்தாலும் சரி பெண் தெய்வமாக இருந்தாலும் சரி குலதெய்வத்தை வழிபாடு செய்வதற்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்கள் மிகவும் சிறப்பு மிகுந்த தினங்களாக திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக அமாவாசை தினம் என்பது குலதெய்வம் மற்றும் முன்னோர் வழிப்பாட்டிற்கு உரிய தினமாக கருதப்படுகிறது.
அந்த வகையில் ஆவணி மாத அமாவாசை என்பது ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி பகல் 12:29க்கு தொடங்கி மறுநாள் அதாவது ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி பகல் 12:59க்கு நிறைவடைகிறது. இந்த அமாவாசை திதி நிறைவடைவதற்குள் நாம் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அப்படி நாம் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வதற்கு உகந்த நேரம் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரம் உதவி செய்யும். பொதுவாகவே நாம் மற்ற நேரங்களில் வழிபாடு செய்வதை விட பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்யும்பொழுது அதீத பலன் கிடைக்கும் அல்லவா? அதே போல் தான் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு சரியாக 5:00 மணிக்கு வீட்டு பூஜை அறையில் குலதெய்வ வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும்.
வீட்டில் குலதெய்வத்தின் சிலை, படம் இருக்கும் பட்சத்தில் அதற்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்யலாம். குலதெய்வத்தின் படம், சிலை இல்லை என்பவர்கள் பூஜையரையில் குலதெய்வத்தை நினைத்து இந்த வழிபாட்டை செய்யலாம். ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் ஐந்து அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த அகல் விளக்கிற்கு மலர்களால் அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த தீபத்திற்கு முன்பாக தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய இனிப்பு பொருள், பால், தேன், பழங்கள் என்று ஏதாவது ஒன்றை நெய்வைத்தியமாக வைக்க வேண்டும்.
பிறகு உங்களுடைய குல தெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு “ஓம் குலதெய்வத்தின் பெயர் வசி வசி” என்னும் மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை 11, 18, 27, 48, 54, 108 என்ற எண்ணிக்கையில் தங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை முழுமனதோடு ஆத்மார்த்தமாக குலதெய்வத்தை நினைத்து கூற வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் உண்ண வேண்டும். இப்படி அமாவாசை திதி வரக்கூடிய பிரம்ம முகூர்த்த நேரத்தில் குலதெய்வத்தை நாம் வழிபாடு செய்யும்பொழுது குலதெய்வத்தின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: முன்னோர்கள் மனம் குளிர்ந்து பித்ரு தோஷம் நீங்க
குலதெய்வத்தை நினைத்து அமாவாசை தினத்தில் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைவரும் இப்படி வழிபாடு செய்வதன் மூலம் அந்த குடும்பத்திற்கு நல்லவை அனைத்தும் நடக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.