ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறப்பான ஒரு முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றால் அவர் செய்யக்கூடிய தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய பொருளாதாரம் சிறப்பாக அமையும். அப்படி அவர்களுடைய பொருளாதாரம் சிறப்பாக அமைவதற்கும் தொழில் மற்றும் வேலையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தடைகள் நீங்கி நல்ல ஒரு வெற்றிகரமான தொழிலையும் வேலையும் பெறுவதற்கும் சூரிய பகவானின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். அப்படிப்பட்ட சூரிய பகவானின் அருளை பெறுவதற்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தொழிலில் முன்னேற்றம் ஏற்பட
சூரிய பகவானை யார் ஒருவர் தொடர்ச்சியாக வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் செய்யும் தொழில் மிகவும் சிறப்பாக அமையும். வேலை தொடர்பான எந்தவித முன்னேற்றமாக இருந்தாலும் அதற்கும் சூரிய பகவானின் அருளே தேவைப்படுகிறது. சிறப்பான ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும், எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சூரிய பகவானுக்குரிய கிழமையாக தான் ஞாயிற்றுக்கிழமை திகழ்கிறது. தினமும் சூரிய பகவானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாடு என்பது நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு தீப வழிபாட்டை இப்பொழுது பார்ப்போம்.
இந்த தீப வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் இருக்கக்கூடிய சூரிய ஹோரையில் செய்ய வேண்டும். சூரிய பகவானுக்குரிய நிறமாக ஆரஞ்சு நிறம் திகழ்கிறது. அதனால் இந்த வழிபாட்டை செய்யக் கூடியவர்கள் ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவதன் மூலம் சூரிய பகவானின் அருளை அதிக அளவில் பெற முடியும். சூரிய வெளிச்சம் வரக்கூடிய இடத்தில் இந்த தீப வழிபாட்டை செய்வது என்பது கூடுதல் சிறப்பு. ஒரு வேளை அப்படி வழிபாடு செய்ய இயலவில்லை என்பவர்கள் வீட்டு பூஜை அறையில் கூட இந்த வழிபாட்டை செய்யலாம். முடிந்த அளவிற்கு சூரிய வெளிச்சம் படக்கூடிய வெட்ட வெளியில் செய்வது நல்ல பலனை தரும்.
ஒரு வாழை இலையை விரித்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வெற்றிலையை வைத்து அந்த வெற்றிலைக்கு மேல் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து அந்த பிள்ளையாருக்கு அருகம்புல், வாசனை மலரை வைத்து விடுங்கள். பிறகு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றை வைக்க வேண்டும். ஆரஞ்சு நிறத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு இனிப்பு பொருளையும் நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு புதிதாக வாங்கிய இரண்டு அகல் விளக்குகளை வைத்து அதில் நெய் ஊற்றி இரண்டு சிவப்பு திரிகளை ஒன்றாக சேர்த்து ஒவ்வொரு விளக்கிலும் போட்டு சூரிய பகவானை மனதார நினைத்துக் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும்.
தீபத்தை ஏற்றி முடித்த பிறகு தங்களுக்குத் தெரிந்த சூரிய பகவானின் மந்திரத்தையோ அல்லது “ஓம் நமோ நாராயணாய நமோ நமஹ” என்னும் மந்திரத்தையோ முழு மனதோடு சூரிய பகவானை பார்த்தவாறு கூற வேண்டும். இந்த மந்திரத்தை 12 முறை கூறுவது நல்ல பலனைத் தரும். சூரிய பகவானுக்கு கடைசியாக கற்பூர தீப தூப ஆராத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடலாம்.
இதையும் படிக்கலாமே: சகல நன்மைகள் தரும் ஆவணி ஞாயிறு
மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை முழுமனதோடு சூரியபகவானை நினைத்து செய்பவர்களுக்கு அவர்கள் செய்யும் தொழில் மற்றும் வேலை சிறப்பாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.